Raw Garlic Health Benefits In Tamil
பூண்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா ஆகும். இதன் லேசானா காரமான சுவை மற்றும் வாசனை காரணமாக இது பல உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது சமையலுக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது.
Raw Garlic Health Benefits In Tamil
தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :
இதய ஆரோக்கியம் மேம்படுத்தும்
பூண்டு இரத்த அழுத்தத்தை குறைக்கும், கொழுப்பின் அளவைக் குறைக்கும், தமனிகள் கடினமாவதைத் தடுக்கும். இதனால் பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பூண்டில் இருக்கும் நுகர்வு காரணமாக இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
செரிமான ஆரோக்கியம் மேம்படும்
தினமும் வெயிற்றில் பூண்டு சாப்பிடுவதால், செரிமானத்தை தூண்டும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இது செரிமான நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்தை சமப்படுத்த உதவுகிறது.
Raw Garlic Health Benefits In Tamil
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
பச்சை பூண்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சல்பர் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது. எனவே, தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தால் தொற்று மற்றும் நோய்கள் வருவதை தடுக்க உதவுகிறது.
உடலை நச்சு நீக்கும்
பூண்டில் இருக்கும் சல்பர் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது கல்லீரல் செயல்ப்படாடிற்கு பெரிதும் உதவுகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. இதன் மூலம் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்ப்படும்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் தினம் கொஞ்சம் பூண்டு; உங்கள் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா?
Raw Garlic Health Benefits In Tamil
வாய் ஆரோக்கியம் மேம்படும்
பூண்டு இருக்கும் பண்புகள் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சை உள்ளிட்ட நோய் கிருமிகள் எதிர்த்து போராட உதவுகிறது. பூண்டை மெல்லு சாப்பிட்டால் தொற்று அபாயத்தை குறைக்கும் மற்றும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
முகப்பரு குறைக்கும்
பச்சை பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தோல் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெற பெரிதும் உதவுகிறது. இதுதவிர, முடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.