
தற்போது நாம் அனைவரும் அவசர அலுவலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால், சாதத்தை வடிப்பதற்கு கூட நேரம் இல்லாமல் குக்கரில் வைத்து சாப்பிடுகிறோம். மேலும் இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஆனால், வடித்த சாதத்தை சாப்பிடுவது மட்டுமின்றி அதன் கஞ்சியிலும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பானம் இயற்கை நிவாரணியாக பலவற்றையும் குணப்படுத்த உதவுகிறது.
ஏன்..நம்முடைய முன்னோர்கள் கூட காலை எழுந்ததும் அவர்கள் நீராகாரம் என்று அழைக்கப்படும் சாதம் வடித்த தண்ணீரை தான் குடித்து வந்தார்கள். அதுதான் அவர்களது காலை ஆரோக்கிய பானமாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் நாம் ஹார்லிக்ஸ், பூஸ்ட் என்று குடித்து வருகிறோம். அதையும் நாம் நம்முடைய குழந்தைகளுக்கும் கொடுக்கிறோம்.
நாம் ஆரோக்கியமானது என்று குடிக்கும் அந்த பானங்கள் கண்டிப்பாக நீராகாரத்திற்கு ஈடாகாது என்று சொல்லலாம். ஆம், ஏனெனில் நீராகாரத்தில் அவ்வளவு அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. எனவே வடித்த சாதத்தின் தண்ணீர் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகளை தருகிறது என்று இங்கு பார்க்கலாம்.
சாதம் வடித்த தண்ணீர் நன்மைகள்:
1. ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது
சாதம் வடித்த கஞ்சியில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளதால், இது ஆற்றலை அதிகரிக்க செய்யும். எனவே அரிசி கஞ்சியில் சிறிதளவு உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும். குறிப்பாக உடற்பயிற்சிக்கு பிறகு சோர்வு ஏற்படுவதை தடுக்கும். மற்றும் உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
2. செரிமான கோளாறுகளை சரி செய்யும்
சாதம் வடித்த தண்ணீரை குடிப்பதன் மூலம் செரிமான கோளாறுகளை சுலபமாக சரி செய்ய முடியும். இந்த பானத்தை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு, செரிமான கோளாறுகள் நீங்குவது மட்டுமின்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்க செய்கிறது மற்றும் குடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
3. உடலில் நீர்சத்தை அதிகரிக்கும்
சாதம் வடித்த கஞ்சியில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நம்முடைய உடலில் எலக்ட்ரோலைட்களை சமப்படுத்த இது உதவுகிறது. குறிப்பாக நாம் உடல்நிலை சரியில்லாத சமயங்களில் அல்லது வெயில் காலங்களில் நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறையும். அத்தகைய சூழ்நிலையில், இந்த பானத்தை குடித்தால், இழந்த நீர்ச்சத்தை நமக்கு வழங்கும்.
4. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
சாதம் வடித்த கஞ்சியில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் உள்ளதால் இதை குடித்து வந்தால் சருமத்தில் எரிச்சல், வீக்கம் போக்குகிறது மற்றும் முகப்பருக்களை குறைக்க உதவுகிறது.
5. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
சதம் அடித்த தண்ணீரில் பொட்டாசியம் உள்ளதா இது உடலில் இருக்கும் சோடியம் அளவை கட்டுப்படுத்தி, இதை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
6. உடல் எடையை குறைக்கும்
சாதம் வடித்த நீரில் கலோரிகள் மிகவும் குறைவாக இருப்பதால் இதை குடிப்பதன் மூலம் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும். இதனால் பசி கட்டுப்படுத்தப்பட்டு அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. எனவே உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்.
இதையும் படிங்க: ஒரு செலவு இல்லாமல் நீங்களும் கொரியன் பெண்களைப் போல அழகாக இந்த பார்முலாவை ட்ரை பண்ணுங்க..!!
7. மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும்
சாதம் வடித்த தண்ணீரில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்க உதவுகிறது.
பிற நன்மைகள்:
நீர்க்கடுப்பு பிரச்சனை, அடி வயிற்று வலி, சிறுநீர் கழிப்பது எரிச்சல், வெள்ளை படுதல், கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய சாதம் வடித்த கஞ்சியை குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இதையும் படிங்க: "பழை சோறு" ஒளிந்திருக்கும் மருந்துவ பயன்கள்...தெரிஞ்சா இனி தூக்கி போடமாட்டீங்க...!!