
“உன் நண்பன் யார் என்று சொல், நீ யார் என்று சொல்வேன்” என்கிற பழமொழி தமிழகத்தில் உண்டு. ஒருவரின் நட்பு வட்டாரத்தை வைத்து அவர்களது குணாதிசயங்களை கூறிவிட முடியும். அந்த அளவிற்கு ஒவ்வொருவரின் வாழ்விலும் நட்பு என்பது இன்றியமையாதது. குழந்தைப் பருவத்தில் ஒருவருக்கு கிடைக்கும் சிறந்த நட்பு அவர்களை வாழ்வில் முன்னேற பெரிய அளவில் உதவும். ஆனால் ஒரு சில நட்புகள் குழந்தைகளுக்கு மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தலாம். சில நட்புகள் தேவையற்ற குழப்பம், சோகம், பயத்தை மட்டுமே குழந்தைகளின் வாழ்வில் கொண்டு வருகிறது. அந்த வகையில் குழந்தைகள் நெருங்கிப் பழகுவதில் கவனமாக இருக்க வேண்டிய நபர்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒரு ஆரோக்கியமான போட்டி குழந்தைகளை கூர்மையாக்கும் என சிலர் நம்புகின்றனர். முதல் மண் மதிப்பெண் எடுப்பது, நன்றாக வரைவது, வேகமாக சாப்பிடுவது போன்ற செயல்களில் முதலிடம் பிடிக்க வேண்டும் சில குழந்தைகள் ஈடுபடுகின்றனர். ஆனால் இது அவர்களை பல சமயங்களில் மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது. சில குழந்தைகள் எப்போதும் மற்றவர்களை விட சிறந்தவர்களாக இருக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு போட்டி மனப்பான்மை குறைவாக இருப்பதோடு வெற்றி பெறுவதை மட்டுமே குறிக்கோளாக கொள்கின்றனர். யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அவர்களுடன் மட்டுமே நட்பு பாராட்டுகின்றனர். இது ஒரு ஆபத்தான போக்காகும். குறைவான மதிப்பெண் எடுக்கும் குழந்தைகளுக்கு இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே ஆரோக்கியமான போட்டியை மேற்கொள்ளாத குழந்தைகளுடன் நம் குழந்தைகளை பழக விடுவது ஆபத்தானது. அவர்களிடமிருந்து நம் குழந்தைகளை தள்ளியே வைக்க வேண்டும்.
சில குழந்தைகள் மற்றவர்களை சிறுமைப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுவர். தோற்றம், உடைகள், குடும்பங்களை பற்றி தவறாக பேசுவது, கிண்டல் செய்வது மூலம் தங்கள் நகைச்சுவையை உருவாக்குகிறார்கள். குழந்தைகள் செய்யும் இந்த நகைச்சுவை தீங்கற்றதாக தோன்றலாம். ஆனால் காலப்போக்கில் அவை பிற குழந்தைகளின் மனதில் தீவிரமான காயத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய நட்புகள் பெரும்பாலும் நம் குழந்தைகளுக்கு இருத்தல் கூடாது. “நகைச்சுவையை நகைச்சுவையாக பாருங்கள்” என்கிற கருத்துக்கள் கூறப்படலாம். ஆனால் இது போன்ற உருவக் கேலிகளும் எல்லையை தாண்டிய நகைச்சுவைகளும் குழந்தைகளின் மனதில் ஆழ்ந்த வடுவை உருவாக்கலாம். எனவே பிறரை பார்த்து சிரிக்கும் குழந்தைகளிடம் உங்கள் குழந்தைகளை நெருங்கி பழக விடாதீர்கள்.
குழந்தைகள் விசுவாசத்தை புரிந்து கொள்ள மிகவும் சிறியவர்கள் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் உண்மையைச் சொன்னால் இளம் வயதிலேயே கடினமான காலத்தில் நம்முடன் யார் இருக்கிறார்கள்? யார் இருக்க மாட்டார்கள்? என்பதை குழந்தைகள் உணர்ந்து கொள்கின்றனர். கடினமான காலத்தில் யார் நம்முடன் இருப்பார்கள்? யார் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள்? என்பதை குழந்தைகள் சிறு வயதிலேயே புரிந்து கொள்கின்றனர். கடினமான காலத்தில் விட்டுச்செல்லும் நபர்களிடம் குழந்தைகளை நெருங்கிப் பழக விடாதீர்கள். இதுபோன்ற நபர்கள் சுற்றி இருக்கும் பொழுது குழந்தைகள் மனதில் அன்பு/காதல் தற்காலிகமானது என்கிற தவறான எண்ணம் பதிந்து விடக்கூடும். எனவே அவர்களிடமிருந்து குழந்தைகளை விலக்கியே வையுங்கள்.
சில குழந்தைகள் அனைத்து விஷயங்களையும் தங்கள் தலைமையில் மட்டுமே செய்ய விரும்புகின்றனர். எந்த விளையாட்டை விளையாட வேண்டும்? எந்த நபரிடம் பேச வேண்டும்? என்ன சொல்ல வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று பிற குழந்தைகளை கட்டுப்படுத்துகின்றனர். இது தவறான அணுகு முறையாகும். குழந்தைகளை பிற குழந்தைகள் கட்டுப்படுத்துவதை அனுமதிக்காதீர்கள். இந்த நட்புகள் பெரும்பாலும் முட்டை ஓடுகளில் நடப்பது போல உணரப்படுகின்றன. ஏதாவது தவறு செய்து விடுவோமோ அல்லது அந்த நண்பரின் நட்பை இழந்து விடுவோமோ என்ற பயத்திலேயே குழந்தைகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதை நிறுத்தி விடுவர். கருத்துக்களே கூறாமல் அமைதியை கடைபிடிப்பது என்பது அவர்களின் தனித்தன்மையையே அழித்து விடும்.
நட்பு வட்டாரத்தில் அதிகமாக புறணிகள், வதந்திகள் பேசும் குழந்தைகளிடம் உங்கள் குழந்தைகளை பழக விடாதீர்கள். சிலரின் தனிப்பட்ட தகவல்களை பேசுவது பொழுதுபோக்கு என சிலர் கருதுகின்றனர். அவர்கள் பிறரின் ரகசியங்களையும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் கேலி பேசி தவறாக சித்தரிக்கின்றனர். நம் குழந்தைகள் கூறும் ரகசியங்களையும் அவர்கள் பிறரிடம் இதுபோல சொல்லக்கூடும். இதனால் குழந்தைகளுக்கிடையே இருக்கும் நம்பிக்கை உடைந்து விடும். எனவே குழந்தைகள் உணர்வுகளை அடக்கி வைக்கத் தொடங்கலாம். எனவே ஒருவரின் ரகசியங்களை பிறரிடம் கூறும் நண்பர்களிடம் குழந்தைகளை நெருங்கிப் பழக விடாதீர்கள். இவை நம்பிக்கை இல்லாத நட்புகள் ஆகும்.
விளையாட்டுத்தனமாக இருப்பதற்கும், வேண்டுமென்றே பொறுப்பற்றவர்களாக இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. குழந்தைப் பருவத்தில் பெரும்பாலும் ஆர்வமும், தீங்கற்ற குறும்பும் வரும். ஆனால் சில குழந்தைகள் சிறு வயதிலேயே வரம்புகளை தாண்டுகிறார்கள். ஆசிரியரிடம் பொய் சொல்வது, பெற்றோரிடம் பொய் சொல்வது, வீட்டில் திருடுவது, விதிகளை மீறுவது, மற்றவர்களை கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இத்தகைய குழந்தைகளுடன் நம் குழந்தைகள் நெருக்கமாக இருப்பது ஆபத்தான சிக்கலில் இழுத்து விடக்கூடும். எனவே விதிகளை மீறுவதில் மகிழ்ச்சி அடையும் குழந்தைகளிடம், நம் குழந்தைகளை நெருங்கி பழக ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.