பட்டுப் புடவைகளை வாஷிங் மெஷினில் எப்படி துவைப்பது? இது மட்டும் பண்ணிடாதீங்க!

First Published Oct 9, 2024, 3:11 PM IST

பட்டு துணிகளை மெஷிங் இயந்திரத்தில் துவைக்க முடியும் என்றாலும், சில குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பட்டுப் புடவைகளை மெஷினில் துவைப்பதற்கான சரியான முறைகள் மற்றும் பாதுகாப்பு குறிப்புகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

பட்டுப்படவைகள் என்றாலே பெண்களுக்கு அலாதிப் பிரியம் தான். எத்தனை புடவைகள் இருந்தாலும், பட்டுப்புடவைகளை அதிகமாக விரும்புகின்றனர். சில பெண்கள் தங்கள் அம்மா, பாட்டி பட்டுப் புடவைகளை கூட பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர். இதனாலேயே பெண்கள் தங்கள் பட்டுப் புடவையில் சுத்தம் செய்வதில் கவனமாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் தங்களின் பட்டுப் புடவைகளை உலர் சுத்தம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் பட்டு ஆடைகளை வாஷிங் மெஷினில் துவைக்கலாம். அதற்கு சரியான வழிமுறைகள் என்ன? இது முற்றிலும் பாதுகாப்பானதா? விரிவாக பார்க்கலாம்.

பட்டு துணிகளை மெஷினில் துவைக்கலாமா?

பட்டு துணிகளை மெஷிங் இயந்திரத்தில் துவைக்கலாம், ஆனால் அதற்கு முன், மெஷின் வாஷ் உண்மையில் பரிந்துரைக்கப்படுகிறதா என்பதை அறிய, பராமரிப்பு லேபிளை எப்போதும் படிக்கவும். ட்ரை க்ளீன் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால், அதை வாஷிங் மெஷினில் கழுவக்கூடாது. உங்கள் பட்டு துணிகளை துவைக்க சிறப்பு கவனம் தேவை. சாதாரண பருத்தி ஆடைகளைப் போல் துவைக்க முடியாது. 

35 வயசுக்கு மேலயும் இளமையாக தெரிய ஆசையா? இதை செஞ்சா போதும் பள பள பளனு இருப்பீங்க

Latest Videos


உங்கள் பட்டு துணிகளை இயந்திரத்தில் துவைப்பது எப்படி?

ஊறவைக்கவும்: உங்கள் பட்டு துணிகளை குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும். துர்நாற்றம் மற்றும் கார தடயங்களை அகற்ற, நீங்கள் 1/4 கப் வினிகரை தண்ணீரில் கலக்கலாம்.

மெஷின் வாஷ்: உங்கள் பட்டு துணிகளை உள்ளே திருப்பி ஒரு சலவை பையில் வைக்க வேண்டும். இந்த பை கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. அல்லது தலையணை உறையையும் பயன்படுத்தலாம். இயந்திர அமைப்பு மிக முக்கியமான பகுதியாகும். உங்கள் வாஷிங் மெஷினில் நுட்பமான சுழற்சியைத் தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்ய வேண்டும். சுழல் குறைவாக இருக்க வேண்டும், மேலும் நீர் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேல் இருக்கக்கூடாது. சுழற்சி முடிந்த உடனேயே ஆடைகளை அகற்ற வேண்டும், இல்லையெனில் ஆடையில் சுருக்கம் ஏற்படலாம். 

உலர்த்துதல்: துணிகளை அவற்றின் இயற்கையான வடிவத்தில் உலர வைக்கவும். பட்டுப்புடவைகளை ட்ரையரில் வைக்கவோ கூடாது. அதிகப்படியான தண்ணீரை அகற்ற, உங்கள் துணிகளை உலர்ந்த துண்டில் வைத்து மெதுவாக துடைக்கலாம். மேலும் உங்கள் பட்டு துணியை நேரடியாக சூரிய ஒளியில் காய வைக்க வேண்டாம். இது நிறத்தை மங்கச் செய்யலாம். பின்னர் சுருக்கங்களை நீக்க ஸ்ட்மீரில் உலர்த்தலாம்.

தலைமுடியை இறுக்கி கட்டினால் முடி மட்டும் உதிராது.. கொண்டை போடுற பெண்களுக்கு 'அந்த' பாதிப்பு வரும்!! 

பருத்தி துணிகளை துவைப்பதை விட பட்டு துணிகளை துவைக்கும் போது அதிக கவனம் தேவை. உங்களுக்கு வாஷிங் மெஷினில் போடுவதில் சந்தேகம் இருந்தால் அவற்றை ட்ரை க்ளீன் செய்ய அனுப்பவும். உங்கள் பட்டுப்புடவைகளை ஒரு சலவை பையில் போது, நுட்பமான சுழற்சியைத் தேர்ந்தெடுத்து, உங்கள் துணிகளைத் துவைக்க குளிர்ந்த நீரைத் தேர்ந்தெடுக்கவும். துவைத்த பின், உங்கள் பட்டு ஆடைகளை உங்கள் அலமாரியில் தொங்க விடுங்கள். இதன் மூலம் பட்டுப்படவையை பத்திரமாக பாதுகாக்க முடியும். 

click me!