ஏசி தண்ணீரை வீணாக்காதீங்க..!! இப்படி யூஸ் பண்ணுங்க..!!

Published : Aug 16, 2023, 01:51 PM ISTUpdated : Aug 16, 2023, 01:54 PM IST

ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை வீணாக்காமல் எப்படி பயன்படுத்துவது என்று இங்கு பார்க்கலாம்.  

PREV
15
ஏசி தண்ணீரை வீணாக்காதீங்க..!! இப்படி யூஸ் பண்ணுங்க..!!

ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை என்ன செய்வது? இந்தக் கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால், அதை எப்படி மீண்டும் பயன்படுத்த முடியும் என்று தான் பெரும்பாலானோர் பதிலளிப்பார்கள். நீங்கள் அதை அழுக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஏசியில் இருந்து வெளியேறும் நீர் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகும். இதை நீங்கள் பல வகையான வேலைகளுக்கு இதைப் பயன்படுத்தலாம். எனவே ஏசியில் இருந்து வரும் நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

25

துணிகளை துவைக்க:
துணி துவைக்கும் போது குழாயில் தண்ணீர் இல்லாமல் போனால் வேலையை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை துணி துவைக்க பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:  ஏசி ஃபில்டரை ஒருபோதும் இப்படி சுத்தம் செய்யாதீங்க..! சேதமடையலாம்..!!

35

செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற:
தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு ஏசி நீர் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் ஏசியில் இருந்து அதிக தண்ணீர் வெளியேறினால், அதை வாய்க்காலில் விடாமல், வீட்டின் தொட்டிகளில் வைக்கவும்.

45

வீட்டை சுத்தம் செய்ய:
உங்கள் வீட்டில் ஏசி இருந்தால், சுத்தம் செய்ய குழாயிலிருந்து சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இதற்கு ஏசியின் வடிகால் தண்ணீரைப் பயன்படுத்தலாம். அத்துடன் அதுகழிப்பறையை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: வீட்டில் ஏசி தீப்பிடிப்பதற்கான 4 காரணங்கள் இவை தான்!! எப்படி தடுக்கணும் தெரியுமா?

55

வாகனங்களை சுத்தம் செய்ய:

ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீர் தெளிவாக இருப்பதால் நீங்கள் பைக் மற்றும் கார் கழுவ இந்த தண்ணீரை பயன்படுத்தலாம். இது காரின் உட்புறத்தை சுத்தம் செய்வதையும் பாதுகாப்பானதாக ஆக்குகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories