தாய் - மகள் உறவை ஆயுளுக்கும் பலப்படுத்தனுமா? சூப்பரான '3' டிப்ஸ்!!

Published : Dec 10, 2024, 04:50 PM IST

Mother-Daughter Relationship : தாய்க்கும் மகளுக்கும் இடையே இடைவெளியை உருவாகும் பல சூழ்நிலைகள் வரும் அத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கும் உங்களது மகளுக்கும் இடைவெளி இருந்தால் இந்த முறைகள் மூலம் உங்களது உறவை வலுப்படுத்துங்கள்.

PREV
15
தாய் - மகள் உறவை ஆயுளுக்கும் பலப்படுத்தனுமா? சூப்பரான '3' டிப்ஸ்!!
mother and daughter relationship tips in tamil

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவளது முதல் ரோல் மாடல் அவளது அம்மா தான். அதுமட்டுமின்றி, அவரது முதல் தோழியும் அவளுடைய தாய் தான். மேலும் தாய்க்கும் மகளுக்கும் இடையேயான உறவு ரொம்பவே தனித்துவமானது என்று சொல்லலாம்.

தாய் தன்னுடைய மகளுக்கு எப்போதுமே படிப்படியாக வெவ்வேறு விஷயங்களை கற்றுக் கொடுப்பாள். சொல்லப்போனால் அம்மா தன் மகளுக்கு எந்த சூழ்நிலையிலும் கேடகமாக நிற்கிறாள். தன் மகளை புரிந்து கொண்ட தாய் கஷ்டமான சூழ்நிலைகளில் அவளுக்கு தைரியத்தை கொடுக்கிறாள்.

25
Communication tips for mother and daughter in tamil

இத்தகைய சூழ்நிலையில், தாய் மகளுக்கிடையான உறவானது மகளின் குழந்தை பருவம் வரை தான் உணர்வு பூர்வமாக விளங்கும். அதுவே மகள் டீன் ஏஜ் வயதை எட்டியவுடன் அவர்களுக்கு இடையேயான உறவில் சற்று தடுமாற்றம் ஏற்படும். இந்த வயதில் மகளுக்கு தன் தாய் சொல்லும் விஷயங்களை கேட்கும் மனநிலை இருக்காது தன்னிச்சையாக செயல்படு தான் விரும்புவார்கள்.

முக்கியமாக டீனேஜ் பருவத்தில் தான் தாய்க்கு மகள் மீது அதிக அக்கறை கூடும். ஆனால் அது மகளுக்கு வெறுப்பாக இருக்கும். மேலும் தனது மகள் தன்னுடைய விருப்பத்திற்கு நடந்து கொள்ள வேண்டும் என்று தாய் விரும்புபாள். ஆனால் அதற்கு தகுந்த மாதிரி மகள் நடந்து கொள்ளாவிட்டால் அவள் மீது கடுமையாக கோபத்தை வெளிப்படுத்துவார். இதனால் தாய் மகள் உறவில் விரிசல் ஏற்படும். எனவே இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

35
Mother and daughter bonding activities in tamil

தாய்க்கும் மகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவது எப்படி?

கண்டிக்காமல் அன்பாக சொல்லுங்கள்:

பொதுவாக டீன் ஏஜ் பருவத்தில் பெண்கள் தங்களது அழகை மெருகேற்ற விரும்புவார்கள். சொல்லப்போனால் அழகுக்கு அவர்கள் ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே, இப்படி இருக்கும் உங்களது மகளை அவளது மனம் நோகாதவாறு அன்பாக எடுத்துக் கூறுங்கள்.

பொது வெளியில் திட்டாதே!

உங்களது மகளின் சில செயல்பாடுகளில் ஏதேனும் தவறை நீங்கள் கண்டால் உடனே உங்களது குடும்பத்தினர், உறவினர்கள் அல்லது பொதுவெளியில் ஒருபோதும் திட்ட வேண்டாம். இதனால் உங்களது மகள் அவமானமாக கருதலாம். மேலும் அவளுக்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடும் இதனால் தாய் மகள் உறவில் விரிசல் வருவது உறுதி. எனவே, அதற்கு பதிலாக அவர்கள் செய்த தவறை பக்குவமாக பேசி புரிய வைக்கவும்.

45
building a strong mother and daughter relationship in tamil

ஒப்பிட்டுப் பேசாதே!

நீங்கள் உங்களது மகளின் படிப்பு விஷயத்தில் அவளிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம்.  முக்கியமாக உங்களது மகளின் நண்பர்கள் அல்லது மற்றவர்களுடன் ஒருபோதும் ஒப்பிட்டு பேச வேண்டாம். 

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு ஒரே கதையை 'பல' தடவை சொல்றதால 'இப்படி' ஒரு நன்மை இருக்குனு தெரியுமா?

55
Mother and daughter relationship goals in tamil

இப்படி வளர்க்கவும்:

- ஒவ்வொரு அம்மாக்களும் தன் மகளுக்கு அன்பு, பணிவு, இரக்கம், உதவும் மனப்பான்மை, தியாகம் உள்ளிட்ட அனைத்து நல் குணாதிசயங்களையும் கொண்டவராக வளர்க்க வேண்டும்.

- அதுபோல ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்ப குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பக்குவத்தை மகளுக்கு சொல்ல வேண்டும்.

- சில விஷயங்கள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாமல் இருந்தால் அதை மகளுக்கு பக்குவமாக விளக்க வேண்டும். 

- மகளது விருப்பங்களை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

இதையும் படிங்க:  குழந்தையை வளர்க்கும் போது இந்த '5' விஷயங்கள் ரொம்ப முக்கியம்; மறந்தும் கூட இந்த '1' தப்பு பண்ணிடாதீங்க!

Read more Photos on
click me!

Recommended Stories