நாம் அவசர அவசரமாக சமைக்கும்போது குக்கர் தான் நமக்கு கை கொடுக்கும். ஆம், உணவை சில நிமிடங்களிலே குக்கரில் சமைத்து விடலாம். அதுவும் குறிப்பாக, வேலைக்கு செல்வோருக்கு குக்கர் ரொம்பவே உதவியாக தான் இருக்கும். ஆனால், நாளாக நாளாக குக்க மக்கர் செய்ய ஆரம்பிக்கும். அதில் ஒன்றுதான் குக்கர் வெளியே தண்ணீர் கசிவது. அடிக்கடி இப்படி தண்ணீர் கசிவு ஏற்பட்டால் சமைப்பது கடினமாக இருக்கும் குக்கரில் இருந்து தண்ணீர் வெளியே வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. எனவே, அதை சரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
24
Cooker repair and maintenance tips in tamil
குக்கரை சுத்தம் செய்தல்:
குக்கரை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் தண்ணீர் வெளியே வரும். குக்கரை மத்த பாத்திரங்களை போல கழுவ கூடாது. அதை சுத்தம் செய்வதற்கான சில யுக்துகள் உள்ளதால், அவற்றை பின்பற்றி கழுவினால் எந்த தொந்தரவும் வராது.
தண்ணீர் அளவு :
குக்கரில் தண்ணீரை அதிகமாக ஊற்றி குறைந்த தீயில் வைத்தால் தண்ணீர் கசிவு ஏற்படும். குக்கரில் சரியான தண்ணீர் அளவு ஊற்றி சமைத்தால் தண்ணீர் கசிவு ஏற்படாது. மேலும் மிதமான தீயில் வைத்து சமைக்கும் போது குக்கரில் இருந்து தண்ணீர் வெளியே வராது.
குக்கரில் நீங்கள் எந்த ஒரு உணவை சமைத்தாலும் அதிலிருந்து தண்ணீர் வெளியே வராமல் இருக்க, குக்கர் மூடியை மூடும் முன் 2-3 துளிகள் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதுபோல குக்கர் மூடியை சுற்றியும் எண்ணெய் தடவவும். இப்படி செய்தால் தண்ணீர் வெளியேறாது.
விசில் சுத்தம் :
குக்கரில் சமைக்கும் போது அதன் விசிலில் உணவு சிக்கிக் கொள்ளும். இதனால் நீராவி வெளியேறாமல் தடுக்கப்படும். எனவே, குக்கரை சுத்தம் செய்யும் போது அதன் விசிலையும் நன்றாக சுத்தம் செய்யுங்கள். குக்கர் விசில் சுத்தமாக இருந்தால் குக்கரில் இருந்து தண்ணீர் கசிவு ஏற்படாது.
குக்கரை பயன்படுத்த பயன்படுத்த அதன் மூடியில் உள்ள இருக்கும் ரப்பர் நாளடைவிலதளர்வாகிவிடும். இதன் காரணமாக குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேற வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே நீங்கள் பயன்படுத்தும் குக்கரின் ரப்பர் தளர்வாக இருந்தால் உடனே அதை மாற்றி விடுங்கள். மேலும் குக்கர் மூடியின் ரப்பர் தளர்வாவதைத் தடுக்க சமைத்த உடனையே அதை குளிர்ந்த நீர் அல்லது ஃப்ரீசரில் போட்டு விடுங்கள். இப்படி செய்தால் குக்கர் ரப்பரை நீண்ட நாள் பயன்படுத்த முடியும்.