
நம் அனைவரின் வீடுகளில் காலையில் காபி அல்லது டீ தயார் செய்வதற்கு பால் காய்ச்சுகிறோம். ஆனால் பால் காய்ச்சுவது சாதாரண விஷயம் தானே என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பொங்கி வழியாமல் பால் காய்ச்சுவது என்பது ஒரு சவாலான விஷயம். இல்லத்தரசிகளுக்கு மட்டுமே அதில் உள்ள கஷ்டங்கள் புரியும். எனவே பால் காய்ச்சும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
நமது கவனம் சிறிது சிதறினால் கூட பால் பொங்கி வீணாகும். அடுப்பை குறைந்த தீயில் வைத்தாலும் சில நேரம் பாலை அடுப்பில் வைத்ததையே பலரும் மறந்துவிடுவார்கள். இதுபோன்ற சூழலில் பால் பொங்கி வழியாது என்றாலும், அதிக நேரம் அடுப்பில் இருந்தால் பால் சுண்டிவிடும்.
காபி, டீக்காக பால் காய்ச்சுவது என்பது தினசரி வழக்கமாக இருந்தாலும் சிறு கவனக்குறைவு காரணமாக பால் பொங்குவதை தவிர்க்க முடியாது. இது ஏதேனும் ஒரு நாளில் நடந்தால் பரவாயில்லை. ஆனால் அடிக்கடி பாலை பொங்கவிடும் போதும் அது பலருக்கும் எரிச்சலையே ஏற்படுத்தும். பால் பொங்கி கீழே சிந்துவதை தவிர்க்க உதவும் சில டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பெரிய பாத்திரத்தில் பாலை காய்ச்ச தொடங்குங்கள். ஏனெனில் பலரும் சிறிய பாத்திரத்தில் பால் காய்ச்சுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் பால் பொங்கி வழியும் போது அது பொங்கி அடுப்பில் வழியலாம். இதனால் பால் வீணாவதுடன், அடுப்பும் அழுக்காகிவிடும். எனவே பால் காய்ச்சும் போது எப்போதும் பெரிய பாத்திரத்தில் பால் காய்ச்சுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது பால் சூடாகும் போது விரிவடைய போதுமான இடத்தை வழங்குகிறது. பால் பொங்கி வர போதிய இடம் கிடைக்கும்.
பாலை காய்ச்சும் போதும் பால் காய்ச்சும் பாத்திரத்தில் கிடைமட்டமாக ஒரு மரக்கரண்டியை வைக்கலாம். இதனால் பால் காய்ந்த உடன் பால் பொங்கி கீழே வழியாது. இப்படி ஒரு மரக்கரண்டியை வைக்கும் போது பால் பொங்கி வரும் அதை கீழே விழ விடாது. இந்த ஹேக் பால் பொங்கி கீழே சிந்தாமல் தடுக்கும்.
பாலை கொதிக்க வைக்கும் போது, ஒரு கிளாஸ் தண்ணீரை உங்களுடன் வைத்திருக்க வேண்டும். பாலை காய்ச்சிய உடனேயே, பால் பொங்கி வரும் போது சிறிது தண்ணீர் தெளிக்கவும். இப்படி செய்வதால் பால் கீழே சிந்தாது.
பால் கொதிக்கும் முன், பால் பாத்திரத்தில் நெய் அல்லது வெண்ணெய் தடவவும். பாத்திரத்தில் நெய் தடவினால் பாத்திரம் மிருதுவாகும். இதன் காரணமாக பால் கொதித்த பிறகும் வெளியேறாமல் பானையில் இருக்கும்.
பால் காய்ச்சும் போது அது பொங்கி கீழே சிந்தாமல் இருக்க உப்பு உங்களுக்கு உதவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பதன் மூலம் பால் பொங்கி கீழே சிந்துவதை தவிர்க்கலாம். பால் பொங்கி கீழே வழிவதை தடுப்பதற்கான மற்றொரு சிறந்த வழி கிளறிவிடுவது. சீரான இடைவெளியில் பாலை கிளறிக் கொண்டே இருக்கும் போது, வெப்பம் சீராக பரவுகிறது. இது பால் பொங்கி கீழே சிந்துவதை தடுக்கிறது.
மேலே குறிப்பிட்டுள்ள முறைகளைப் பின்பற்றி பாலை கொதிக்க வைக்கலாம். நீங்கள் பால் காய்ச்சும் போது பாலும் பொங்கி கீழே வழியாது, உங்கள் சமையலறையும் சுத்தமாக இருக்கும்