Hiccups : தொடர்ந்து விக்கல் எடுக்குதா? ஒரு நொடியில் நிறுத்த சூப்பர் டிப்ஸ்!

Published : Jul 30, 2025, 10:18 AM IST

தண்ணீர் குடித்த பிறகும் விக்கல் நிக்கலையா? கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சித்துப் பாருங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.

PREV
15
Stop Hiccups Instantly

விக்கல் (Hiccups) என்பது அனைவருக்கும் வரக்கூடியது தான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தண்ணீர் குடித்த உடனே விக்கல் நின்று விடும். ஆனால் சிலருக்கு தண்ணீர் குடித்த பிறகும் விக்கல் நிற்காது. நீண்ட நேரம் நீடிக்கும். இது எரிச்சலை ஏற்படுத்தும். அடிக்கடி அல்லது நீண்ட நேரம் விக்கல் எடுப்பது உடலில் ஏதேனும் பிரச்சனைகளின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில் விக்கல் வந்தால் அதை அசால்ட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சரி இப்போது விக்கல் ஏன் வருகிறது? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

25
பிபிசி அறிக்கை

இது குறித்து பிபிசி அறிக்கை குறுகியில் நம் நுரையீரலுக்கு கீழே இருக்கும் தசைகள் திடீரென சுருங்கும் போது தான் விக்கல் ஏற்படுகிறது. மேலும் சுவாச செயல்முறை குழப்பம்டைந்து குரல் நான் திடீரென மூடுவதால்தான் விக்கல் சத்தம் ஏற்படுகிறது. ஆகவே இது ஒரு சுவாச அன்னிச்சையாகும்.

விக்கல் வர காரணங்கள்

உணவே வேகமாக சாப்பிடுவது, குளிர்ந்த அல்லது கார்பனேற்றப்பட்ட பானங்களை குடிப்பது, காற்றை அதிகமாக உள்ள இழுத்தல் வயிற்றில் வாயு உருவாகுதல், மன அழுத்தம், திடீர் சிரிப்பு, பயம் போன்ற காரணங்களாலும் விக்கல் ஏற்படும்.

35
விக்கல் இந்த பிரச்சனைகளின் அறிகுறி!

சில நேரங்களில் விக்கல் மாரடைப்பு போன்ற பிரச்சனையின் அறிகுறியாக கூட இருக்கலாம். அதாவது இதயத்திற்கு அருகே செல்லும் வேகஸ், ஃபிரெனிக் நரம்புகளில் வீக்கம் அல்லது எரிச்சல் ஏற்படும்போது டயாபிராம் ரிஃப்ளெக்ஸ் பாதிக்கப்படும். இது குறித்து அமெரிக்க தேசிய சுகாதார நிறுவன அறிக்கை கூறுகையில் பொதுவாக மாரடைப்பால் வரக்கூடிய விக்கலால் பெண்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். விக்கல் வரும் போது கூடவே மார்பு வலி, மூச்சு திணறல், சோர்வு போன்ற அறிகுறிகள் வந்தால் அதை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்து அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.

45
விக்கல் 48 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தால்?

நிபுணர்களின் கூற்றுப்படி, 48 மணி நேரத்திற்கும் மேலாக விக்கல் நீடித்தால் அது சாதாரணமான விஷயம் அல்ல. உணவு குழாய், மூளை அல்லது நுரையீரல் பிரச்சனை இருப்பதன் அறிகுறியாகும். எனவே 48 மணி நேரத்திற்கும் மேல் விக்கல் உங்களுக்கு நீடித்தால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து அதற்கான சாத்தியமான காரணத்தை கண்டறிந்துக் கொள்ளுங்கள்.

55
விக்கல் நிற்க வீட்டு வைத்தியங்கள் :

- ஆழ்ந்த மூச்சை எடுத்து சிறிது நேரம் பிடித்து வைத்து பிறகு மெதுவாக வெளியிட வேண்டும்.

- குளிர்ந்து நீர் அல்லது வெதுவெதுப்பான நீரை மெதுவாக குடியுங்கள்

- ஒரு ஸ்பூன் சர்க்கரை வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.

- எலுமிச்சை சாற்றை கொண்டு வாயை கழுவுங்கள் இதில் இருக்கும் புளிப்பு கூறுகள் விக்கலை நிறுத்தும்.

- சில ஏதாவது சொல்லி திடீர் பயன்படுத்துவதன் மூலம் அல்லது கவனத்தை சிதறடிப்பதன் மூலம் விக்கலை நிறுத்துவார்கள். இந்த வைத்தியம் விக்கலை நொடியில் நிறுத்தி விடும்.

Read more Photos on
click me!

Recommended Stories