Kitchen Tips : பிரிட்ஜ்ல குழம்பு, இறைச்சி வைச்சு கெட்ட வாடை வீசுதா? உடனே மாற சூப்பரான டிப்ஸ்!!!

Published : Nov 17, 2025, 04:41 PM IST

சமைக்காத இறைச்சி, மீந்து போன குழம்பு வகைகள் போன்றவற்றை பிரிஜில் ஸ்டோர் செய்து வைத்ததால் கெட்ட வாசனை வீசுகிறதா? அந்த நாற்றத்தை வெளியேற்ற சுலபமான தீர்வு இங்கே.

PREV
15
How To Remove Bad Smell From Fridge

பொதுவாக பெரும்பாலான வீடுகளில் மீந்த குழம்பு வகைகள், சமைக்காத இறைச்சி, மீன் ஆக பிரிட்ஜில் வைத்து விடுவோம். அவற்றை வெளியே எடுத்த பிறகும் பிரிட்ஜில் ஒருவிதமான கெட்ட வாசனை அடித்துக் கொண்டே இருக்கும். அதுவும், ஃப்ரிட்ஜை திறக்கும் போதெல்லாம் இந்த கெட்ட வாசனை வந்து கொண்டே இருக்கும். அதை எப்படி சுலபமாக வெளியேற்றுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

25
பேக்கிங் சோடா :

பிரிட்ஜில் அடிக்கும் துர்நாற்றத்தை உறிஞ்சும் தன்மை பேக்கிங் சோடாவிற்கு உண்டு. எனவே காற்று உள்ளே போகும் ஒரு டப்பாவில் பேக்கிங் சோடாவை போட்டு அதை பிரிட்ஜில் வைக்கவும். இப்படி செய்தால் ஃப்ரிட்ஜில் இருந்து கெட்ட வாடை அடிக்காது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை மாற்றினால் போதும்.

35
காபி கொட்டைகள் :

பிரிட்ஜில் அடிக்கும் கெட்ட வாடையை போக்க காபி கொட்டை உதவும். இதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் காபி கொட்டைகளை போட்டு அதை ஃப்ரிட்ஜில் வைக்கவும். டப்பாவில் காபி கொட்டைகளை போட்டு வைத்தால் டப்பாவை மூடாமல் வைக்க வேண்டும். காபி கொட்டையில் இருந்து வரும் நறுமணம் ஃப்ரிட்ஜில் அடிக்கும் துர்நாற்றத்தை நீக்குவது மட்டுமல்லாமல், ஈரப்பதத்தையும் உறிஞ்சும்.

45
கிராம்பு மற்றும் எலுமிச்சை :

ஃப்ரிட்ஜில் அடிக்கும் கெட்ட வாடையை போக்குவதற்கு எலுமிச்சை மற்றும் கிராம்பு சிறந்த தீர்வாகும். இதற்கு ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதன் ஒரு பாதியில் கிராம்புகளை குத்தி வைக்கவும். பிறகு அதை பிரிட்ஜில் ஏதாவது ஒரு பகுதியில் வைத்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் ஃப்ரிட்ஜில் இருக்கும் கெட்ட வாசனை முற்றிலும் வெளியேறிவிடும்.

55
வினிகர் :

சமைக்காத இறைச்சியை பிரிட்ஜில் வைத்தால் கெட்ட வாடை அதிகமாக வீசும். அதை போக்குவதற்கு வினிகர் சிறந்த தேர்வாகும். இதற்கு பிரிட்ஜில் இருக்கும் பொருட்கள் எல்லாம் முதலில் வெளியே எடுத்து விடுங்கள். பிறகு ஒரு கிண்ணத்தில் 30 மில்லி அளவு வினிகரை ஊற்றி அதனுடன் ஒரு கிளாஸ் தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை ஒரு சுத்தமான துணியை பயன்படுத்தி ஃப்ரிட்ஜை முழுவதுமாக துடைக்கவும். பிரிட்ஜை துடைக்கும் முன் பிரிட்ஜ் சுவிட்சை அணைத்து விடுங்கள். பிரிட்ஜ் நன்கு காய்ந்த பிறகு ஆன் செய்யுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories