நீங்கள் குறட்டை பிரச்சினையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் குறட்டை விடுவதை நிரந்தரமாக நிறுத்தி விடலாம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.
குறட்டை விடுதல் என்பது ஒரு சாதாரண பிரச்சனை. ஆனால் இது அருகில் இருப்பவர்களின் தூக்கத்தை சீர்குழித்துவிடும். தூக்கத்தின் போது சுவாச குழாய் சுருங்குவதால் இது நிகழ்கிறது. குறட்டை விடுதல் ஒரு சிறிய பிரச்சனையாக இருந்தாலும், அதை புறக்கணித்தால் பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும். ஆனால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் குறட்டை விடுவதை நிரந்தரமாக நிறுத்திவிடலாம். அவை என்னவென்று இந்த பதிவில் காணலாம்.
26
ஒரு சாய்ந்து தூங்குதல்
மல்லாந்து படுக்கும்போது சுவாசக் குழாய் சுருங்கி குறட்டை அதிகமாக வரும். ஒரு பக்கமாக சாய்ந்து தூங்கினால் சுவாசப்பாதையில் அழுத்தத்தைக் குறைத்து, காற்று எளிதாக செல்ல உதவும். இதனால் குறட்டை விடுதல் குறையும்.
36
அதிக எடை
அதிக எடை கொண்டவர்களுக்கு கழுத்தைச் சுற்றி கொழுப்பு சேர்வதால் சுவாசக் குழாய் குறுகி குறட்டை ஏற்படுகிறது. 5-10% உடல் எடையைக் குறைத்தால் கூட குறட்டை கணிசமாகக் குறையும்.
மது மற்றும் புகைப்பழக்கம் தொண்டைத் தசைகளைத் தளர்த்தி, சுவாசப் பாதையை சுருக்குகிறது. இதனால் குறட்டை அதிகரிக்கும். எனவே, தூங்குவதற்கு 3-4 மணி நேரத்திற்கு முன்பு இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
56
ஆவி பிடித்தல்
மூக்கடைப்பு காரணமாகவும் குறட்டை ஏற்படலாம். சளி, அலர்ஜி, சைனஸ் போன்றவை இதற்கு காரணம். மூக்கடைப்பு ஏற்பட்டால், வாயால் சுவாசிக்க நேரிடும், இது குறட்டையை அதிகரிக்கும். தூங்கும் முன் ஆவி பிடிப்பது நல்லது.
66
ஒரே நேரத்தில் தூங்குவது
நேரத்திற்கு தூங்காமல் இருப்பது, தூக்கமின்மை, சோர்வு போன்றவையும் குறட்டைக்குக் காரணம். தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, 7-8 மணிநேரம் உறங்குவது அவசியம். இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.