இந்த காலத்தில் பெற்றோர் பெண் குழந்தைகளை மிகவும் தைரியமாக வளர்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதற்க்கு அவர்கள் செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாத விஷயங்கள் என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பெண் குழந்தைகளின் முன்னேற்றம் எந்த அளவுக்கு உள்ளதோ, அதே அளவுக்கு அவர்கள் இந்த உலகில் சில போராட்டங்களையும் சந்திக்க தயாராகி உள்ளனர். படிப்பில் துவங்கி வேலை, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் போட்டிகள் இருப்பதால், ஆரம்பத்திலேயே பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் எல்லா விதத்திலும் ஊக்கம் கொடுக்க வேண்டும். மனரீதியாக இதுவே அவர்களை முன்னோக்கி செல்ல உதவும்.
26
சற்றும் தயங்காமல் நோ சொல்லுங்கள்
எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், அவர்கள் துவண்டுவிடாத வண்ணம் அவர்களை தைரியமாக வளர்க்கவும். இந்த பக்குவம் உங்களின் குழந்தைகளுக்கு வருவதற்கு அவர்களுக்கு சில விஷயங்களில் தோல்விகளையும் சொல்லிக்கொடுத்து வளர்ப்பது அவசியம். அவர்கள் கேட்கும் போதே எல்லாவற்றையும் வாங்கி கொடுக்க நினைக்காதீர்கள். தேவையில்லாத பொருட்களை அவர்கள் கேட்டால், சற்றும் தயங்காமல் நோ சொல்லி அவர்கள் மனதை திடப்படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் வேறு ஏதேனும் விஷயத்தில் குழந்தைகள் ஆசைப்பட்டது நடக்காத போது அது அவர்களை பெரிய அளவில் பாதிக்காது.
36
திறமைகளுக்கு ஒருபோதும் தடை போடாதீர்கள்
உங்கள் குழந்தைகளின் திறமைகளுக்கு ஒருபோதும் தடை போடாதீர்கள். படிக்க வேண்டும் என்கிற காரணத்திற்காக அவர்கள் ஆசைப்படும் டான்ஸ், பாட்டு, அல்லது ஸ்போட்ஸ் போன்ற விஷயங்களை தடுப்பது சிறந்த முடிவாக இருக்காது.
46
பெண் குழந்தைகளுக்கு சுயமரியாதையை, சொல்லிக்கொடுத்து வளருங்கள்
உங்களின் பெண் குழந்தைகளுக்கு சுயமரியாதையை, சொல்லிக்கொடுத்து வளருங்கள். அது அவர்களை போல்டாக மாற்றும். அதே போல் பெண் குழந்தைகள் எப்போதும் பாராட்டுகளை அதிகம் விரும்புவது உண்டு. அவர்களை மகிழ்ச்சி படுத்த, அவர்களின் உடை, அணிகலன்கள் போன்றவற்றை பாராட்டுவது போல அவர்கள் செய்யும் ஆக்கபூர்வமான விஷயங்களையும் கைதட்டி, வாய்விட்டு பாராட்டுங்கள். இது உங்கள் குழந்தைகளை உங்களை மிகவும் நெருக்கமாக இருக்க செய்யும். எந்த ஒரு விஷயம் என்றாலும் உங்களிடம் அவர்கள் பயத்தை தாண்டி சொல்லுவார்கள்.
56
தொடுதல் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்:
அதே போல் பள்ளிக்கு செல்லும், போது பெண் குழந்தைகளுக்குத் தொடுதல் உணர்வு பற்றி, கண்டிப்பாக சொல்லி வளர்க்க வேண்டும். நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் பற்றி எடுத்துரைக்க வேண்டும். அதே போல பெற்றோர் வேலை - பணி அழுத்தம் போன்றவை இருந்தாலும் உங்களின் குழந்தைக்காக சிலமணி நேரங்கள் செலவிட வேண்டும்.
66
தேவையில்லாத வாக்குவாதங்கள் வேண்டாம்:
அதே போல் ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரை பார்த்து தான் வளர்கிறார்கள். நாம் செய்வதை தான் குழந்தையும் செய்யும் என்பதை புரிந்து, பெற்றோர் வீட்டில் வேதை இல்லாத சண்டை, வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இது போன்ற பிரச்சனைகள் ஆண் குழந்தைகளை மன ரீதியாக பாதிக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.