Women's Day 2025 : நீங்க நேசிக்கும் பொண்ணுக்கு கிப்ட் கொடுக்க சூப்பரா '5' ஐடியா 

Published : Mar 07, 2025, 05:25 PM IST

இந்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தன்று நீங்கள் நேசிக்கும் பெண்ணிற்கு எத்தகைய பரிசு கொடுக்கலாம் என்பதை குறித்து நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், சில ஐடியாக்கள் பற்றி இங்கு காணலாம்.

PREV
14
Women's Day 2025 : நீங்க நேசிக்கும் பொண்ணுக்கு கிப்ட் கொடுக்க சூப்பரா '5' ஐடியா 

Women's Day 2025 Gift Ideas : நாளை (மார்ச் 08) உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தினம் தான் இது. எனவே, இந்நாளில் உங்களுக்கு பிடித்த பெண்ணிற்கு அதாவது மனைவி, காதலிக்கு ஏதாவது பரிசு கொடுக்க விரும்புகிறார்கள், ஆனால் என்ன கொடுப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?அப்போ இந்த பதிவு உங்களுக்கானது தான். இந்த ஆண்டு மகளிர் தினத்தை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாற்ற தனித்துவமான சில பரிசுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

24
தாய் மற்றும் சகோதரிக்கு

நீங்கள் உங்களது தாய் அல்லது சகோதரிக்கு பரிசு கொடுக்க விரும்பினால் சேலை, புதிய ஜோடி காதணி அல்லது இயர் போன் என எது வாங்கிக் கொடுத்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள் என்பதை அறிந்து கொண்டு பரிசாக கொடுங்கள். இல்லையெனில் அவர்களை ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் செல்லுங்கள். அது அவர்களுக்கு இன்னும் சிறப்பாக இருக்கும். நாள் முழுவதும் உழைக்கும் உங்கள் அம்மாவை மதிய நேர உணவிற்கு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். ரொம்பவே மகிழ்ச்சியாக உணர்வார்கள்.

இதையும் படிங்க:  தமிழ் சினிமாவும் பெண் புரட்சியும்; கோலிவுட் கொண்டாடும் சிங்கப்பெண்கள் ஒரு பார்வை

34
மனைவிக்கு

உங்களது ஒவ்வொரு நாளையும் சிறப்பாக அமைத்துக் கொடுக்கும் உங்களது மனைவியை மகளிர் தினத்தன்று சந்தோஷப்படுத்த தங்க நகைகள் வாங்கி கொடுங்கள். அதாவது தங்கத்தில் நெக்லஸ் அல்லது பிரேஸ்லெட் வாங்கி அவர்களுக்கு பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்துங்கள்.

இதையும் படிங்க:  மகளிர் தின வாழ்த்து 2025: அம்மா, மனைவிக்கு ஸ்பெஷல் மெசேஜ், கவிதைகள்!

44
காதலிக்கு

இந்த ஆண்டு மகளிர் தினத்தன்று உங்கள் காதலிக்கு பரிசு கொடுத்து ஆச்சரியப்படுத்த நினைத்தால் போட்டோ பிரேம், அழகு சாதனங்கள் நிறைந்த பெட்டி போன்றவற்றை வாங்கி கொடுக்கலாம். இது தவிர உங்களது காதலிக்கு இன்னும் சிறப்பாக இது ஒரு பரிசு கொடுக்க நினைத்தால் மசாஜ் பார்லருக்கு அழைப்பு செல்லுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories