March 08 Important Events : ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பெண்கள் செய்து வரும் சாதனைகளை நினைவுகூரும் வகையில் அன்றைய தினம் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். மார்ச் 08ஆம் தேதி நிகழ இருக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்தப் பதிவில் காணலாம்.
25
பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு;
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி குஜராத் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது பெண்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 2,300க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிங்க் ஆட்டோ திட்டம் செயல்பட தொடங்குகிறது. சென்னையில் பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்கும் வகையில் சுயதொழில் வேலைவாய்ப்பாக இத்திட்டம் மார்ச் 8இல் தொடங்குகிறது. இத்திட்டத்தை நாளை (மார்ச் 8) முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 8ஆம் தேதி முதல் தகுதியான பெண்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 உதவித்தொகை அளிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். டெல்லி பெண்களுக்கு மார்ச் 8 ஆம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
55
குறை தீர்ப்பு முகாம்:
ரேஷன் கார்டுகளில் தகவல்கள் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக குறை தீர்ப்பு முகாம்கள் மாதம்தோறும் 2ஆவது சனிக் கிழமைகளில் நடத்தப்படும். இம்மாத முகாம் மார்ச் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் சென்னை மண்டல உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெறவுள்ளது.