ரொம்ப ஆபத்து- குழந்தைகள் தூங்கும் அறையில் வைக்கக் கூடாத பொருட்கள்!!
குழந்தைகள் அறை என்பது அவர்கள் படிப்பு மற்றும் விளையாடுவதற்காக மட்டுமல்ல, அவர்களின் பாதுகாப்புனும் தொடர்புடையது. சில சமயங்களில் பெற்றோர்கள் தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகளின் அறையில் சில பொருட்களை வைத்து விடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு தான் ஆபத்து ஏற்படும். நீங்கள் உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான சூழலை கொடுக்க விரும்பினால், அவர்களின் அறையில் எதை வைக்க வேண்டும், எதை வைக்கக்கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். எனவே குழந்தைகள் தூங்கும் அறையில் எந்த மாதிரியான பொருட்களை வைக்கக்கூடாது என்பதை குறித்து இந்த பதிவில் காணலாம்.
25
கூர்மையான மற்றும் கண்ணாடி பொருள்
குழந்தைகள் தூங்கும் அறையில் ஒருபோதும் கூர்மையான அல்லது கண்ணாடி பொருட்களை வைக்கவே கூடாது. அது அவர்களுக்கு ஆபத்தானது. ஏனெனில் குழந்தைகள் அவற்றுடன் விளையாட தொடங்கினால், அதன் கூர்மையான பகுதி அவர்களது கைகளை வெட்டலாம். எனவே குழந்தைகளின் அருகில் கத்தி, கத்தரிக்கோல், கண்ணாடி பொருட்கள் போன்ற எந்த ஒரு கூர்மையான பொருட்களையும் வைக்க வேண்டாம்.
35
மருந்துகள்
தெரியாமல் கூட குழந்தைகளின் அறையில் எந்த வகையான மருந்துகளையும் வைக்க வேண்டாம். ஏனென்றால் குழந்தைகள் எல்லாவற்றையும் வாயில் போடும் பழக்கம் உண்டு. அப்படிப்பட்ட சூழ்நிலையில், குழந்தைகள் விளையாட்டுத்தனமாக வாயில் ஏதாவது மருந்தை போட்டுவிட்டால் அது அவர்களது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
குழந்தையின் அறையில் ஸ்விட்ச் போர்டு கீழ் மட்டத்தில் அல்லது குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைக்க வேண்டாம். ஏனென்றால் சிறு குழந்தைகள் விளையாட்டுத்தனமாக தங்கள் விரல்களை அவற்றில் வைத்தால் கரண்ட் ஷாக் அடிக்க வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகள் அறையில் எப்போதும் ஸ்விட்ச் போர்டு குழந்தைக்கு எட்டாத உயரத்தில் தான் வைக்க வேண்டும். ஒருவேளை கீழே இருந்தால் அவற்றை டேப்பால் மூடவிடுங்கள்.
குழந்தைகளின் அருகில் கூலர் அல்லது டேபிள் பேனை வைத்திருந்தால் அவற்றை உடனே அங்கிருந்து எடுத்து விடுங்கள். ஏனெனில் சில சமயங்களில் குழந்தைகள் அவற்றுள் ஏதாவது போட்டு விடலாம் அல்லது அவர்களது கை விரல்களை வைக்கலாம். அது அவர்களுக்கு ஆபத்து தான். எனவே குழந்தைகளின் அறையில் ஒருபோதும் டேபிள் ஃபேன் மற்றும் கூலரை வைக்காதீர்கள்.