
குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலைமையில் இருப்பதற்கு அவர்களை நல்ல முறையில் வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். இதற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி சொத்தை கொடுப்பது மட்டுமின்றி, அவர்கள் நல்ல படிக்க ஊக்கப்படுத்துகின்றனர். இதற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் வழங்குகிறார்கள்.
ஆனால், சில சமயங்களில் குழந்தைகள் விளையாட்டுத்தனமாக இருப்பதால் படிப்பை விட விளையாட்டில் தான் ஆர்வம் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கும். சொல்லப்போனால் பெற்றோர்களின் வற்புறுத்துதலால் அவர்கள் படிக்க ஆரம்பித்தாலும் முழு கவனத்துடன் படிக்க மாட்டார்கள். இதனால் சில சமயங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை படிக்கும்படி திட்டுவார்கள் அல்லது அழுத்தம் கொடுப்பார்கள். ஆனால் இப்படி செய்தால் கூட அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்காது என்பதுதான் உண்மை. இத்தகைய சூழ்நிலையில், உங்கள் குழந்தையும் இதே மாதிரி படிப்பில் ஆர்வம் இல்லாமல், விளையாட்டுத்தனமாக இருந்தால், அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை அதிகரிக்க சில விஷயங்களை செய்ய வேண்டும். அது என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: குழந்தைங்க படிக்குறப்ப 'இப்படி' மட்டும் சொல்லாம இருங்க.. சூப்பரா படிப்பாங்க!!
பாராட்டுங்கள்:
உங்கள் குழந்தைக்கு படிப்பின் மீது ஆர்வத்தை வர முதலில் நீங்கள் அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட பாராட்டுங்கள். ஏனெனில் இதை தான் ஒவ்வொரு குழந்தைகளும் தங்கள் பெற்றோரிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் உங்கள் குழந்தையை பாராட்டினால் அவர்கள் மனம் உறுதியாகி, உற்சாகத்துடன் படிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்குவார்கள்.
படிப்பதற்கான நேரத்தை உருவாக்குங்கள்:
நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஒரு வழக்கத்தை உருவாக்குங்கள். அந்த வழக்கத்தின் மூலம் நீங்கள் உங்கள் குழந்தையை ஊக்குவிக்க முடியும். குழந்தையின் படிப்பதற்கான நேரத்தை உருவாக்கினால் அவர்கள் அதை தினமும் பின்பற்றுவதன் மூலம் அவர்களது முழு கவனமும் படிப்பில் தான் இருக்கும். முக்கியமாக குழந்தைகளை 45 நிமிடங்களுக்கு மேல் படிக்க வைக்க வேண்டாம்.
பிறருடன் ஒப்பிட்டுப் பேசாதே!
பல பெற்றோர்கள் செய்யும் தவறு இதுதான். தங்கள் குழந்தை நல்ல படிக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் அல்லது குழந்தையின் நண்பர்களுடன் ஒப்பிட்டு பேசுவார்கள். ஆனால் இது தவறு. பெற்றோர்கள் செய்யும் இந்த காரியத்தால் குழந்தைகள் படிப்பை விட்டு ஓடி விடுவார்கள். சொல்லப்போனால் அவர்களுக்கு படிக்கின்ற எண்ணம் வரவே வராது. எனவே பெற்றோர்களே உங்களது இந்த பழக்கத்தை உடனே மாற்றுங்கள்.
படிப்பில் அழுத்தம் கொடுக்காதே!
குழந்தைகளை நன்றாக படிப்பதற்கு அவர்களை ஊக்கப்படுத்தணுமே தவிர அவர்கள் மீது கல்வியின் அழுத்தத்தை திணிக்க வேண்டாம். இது அவர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். சொல்லப்போனால் குழந்தைகளுக்கு படிப்பு ஒரு சுமையாக தெரியும். எனவே, பெற்றோர்களை நீங்கள் உங்கள் குழந்தையின் மீது படிப்பின் அழுத்தத்தை ஒருபோதும் கொடுக்காதீர்கள்.
யோகா & தியானம்:
படிப்பினால் குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களை யோகா மற்றும் தியான பயிற்சியில் ஈடுபடுத்துங்கள். இதனால் அவர்களது மன அமைதி அடையும் மூளை நன்றாக செயல்படும். இது தவிர, ஆரோக்கியமான உணவையும் குழந்தைகளுக்கு கொடுங்கள்.
இதையும் படிங்க: பெற்றோர் செய்யும் இந்த '3' தவறுகள்.. குழந்தைகள் படிப்பை பாதிக்கும்!!