முடி நீளமா வளர.. சின்ன வெங்காயத்தோட இந்த '1' எண்ணெய் சேர்த்து தேய்ச்சு பாருங்க!!

First Published | Dec 18, 2024, 3:29 PM IST

Hair Growth Tips : முடி நீளமாக வளர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் சின்ன வெங்காயத்துடன் எந்த எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும் இன்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

hair growth tips in tamil

பொதுவாக ஒவ்வொரு பெண்களும் தங்களுக்கு முடி நீளமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் பலவிதமான குறிப்புகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் எந்த பலனுமில்லை. காரணம் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் நம்முடைய வாழ்க்கை முறையால் தான்  இந்த பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Natural remedies for hair growth in tamil

இத்தகைய சூழ்நிலையில், முடி உதிர்வை தடுக்கவும், முடி மீண்டும் நீளமாக வளர செய்யவும் சின்ன வெங்காயம் பெரிதும் உதவுகிறது தெரியுமா? ஆம், சின்ன வெங்காயம் உணவில் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் கூந்தலுக்கும் சிறப்பு கவனம் செலுத்துகிறது. முக்கியமாக வெங்காயத்தில் இருக்கும் கந்தகம் முடி உதிர்வை தடுப்பது மட்டுமின்றி முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.

இதையும் படிங்க:  இந்த '4' விதைகள் போதும்; முடி கொட்டுறது நிக்கும்.. முடியும் நீளமா வளரும்!

Tap to resize

Benefits of Castor Oil for Hair Growth in Tamil

வெங்காயத்தில் இருக்கும் சத்துக்கள்:

வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி, துத்தநாகம், பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்றவை உள்ளன. இவை தலையில் இருக்கும் பாக்கியம் மற்றும் பொடுகை அகற்றவும், முடியை நீளமாக வளர்ச்சி செய்யவும் உதவுகிறது. இப்படி வெங்காயம் முடி வளர்ச்சிக்கு உதவினாலும் இவற்றுடன் ஆமணக்கு மற்றும் ஆளி விதையை சேர்த்து ஹேர் பேக் போட்டால் முடி வளர்ச்சி இன்னும் சிறப்பாக இருக்கும். அது எப்படி போடுவது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Castor oil and onion for hair loss in tamil

முடி நீளமாக வளர சின்ன வெங்காயம் ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்தும் முறை:

இதற்கு முதலில், 50 கிராம் சின்ன வெங்காயத்தை தோலுரித்து அதை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். பின் அதனுடன் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். ஆமணக்கு எண்ணெய் முடியும் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இப்போது இதை அடுப்பில் வைத்து சூடு படுத்தி பிறகு நன்றாக ஆற வைக்கவும்.

இதையும் படிங்க:  இந்த எண்ணெய் '5' துளிகள் போதும்.. வழுக்கை தலையில் கூட முடி வளரும்!!

Castor Oil and Onion for Hair Growth in Tamil

இதனையடுத்து, ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றியது அடுப்பில் வைத்து அதனுடன் 5 ஸ்பூன் ஆளி விதைகளை சேர்த்து சுமார் 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த நீருடன் ஏற்கனவே தயாரித்து வைத்த வெங்காயம் ஆமணக்கு நீரை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு இந்த தண்ணீரை உங்கள் தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும். சுமார் 20 நிமிடம் கழித்து எப்போதும் போல ஷாம்பு போட்டு குளிக்கவும். இதை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் உங்களது முடி விரைவிலேயே நீளமாக வளரும்.

Latest Videos

click me!