
தற்போது மக்களின் வாழ்க்கை முறை ரொம்பவே மாறிவிட்டதால், இன்றைய காலகட்டத்தில் மனஅழுத்தம் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக டீனேஜ் பருவத்தினரிடம் இந்த பிரச்சனை அதிகமாகவே காணப்படுகின்றன.
குழந்தைகள் டீன் ஏஜ் பருவத்தில் நுழைந்தவுடன் அவர்களுக்குள் பல மாற்றங்கள் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில் அந்த மாற்றங்களால் பல சமயங்களில் அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் குழந்தையும் மன அழுத்தத்தில் இருப்பதை நீங்கள் கண்டால் அதை கடக்க அவர்களுக்கு உதவுவது பெற்றோர்களாகிய உங்களது கடமை. இதற்கு சில எளிய முறைகள் மூலம் உங்கள் குழந்தையின் மன அழுத்தத்தை கண்டறிவது மட்டுமல்லாமல், அதை சமாளிக்கவும் அவர்களுக்கு உங்களால் உதவ முடியும் தெரியுமா? அது என்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.
இதையும் படிங்க: பெண் குழந்தைகளிடம் பெற்றோர் சொல்லவே கூடாத '5' முக்கிய விஷயங்கள்!!
குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம்:
பரபரப்பான இந்த உலகில் பெற்றோர்கள் தங்கள் வேலையில் ரொம்பவே பிஸியாக இருப்பதால் அவர்கள் தங்கள் குழந்தை மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதை கூட உணர முடியாமல் போய்விடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் ஒரு குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவது மிகவும் அவசியம். மேலும், உங்கள் குழந்தையின் நடத்தையில் ஏதாவது வித்தியாசத்தை நீங்கள் கண்டால் உடனே அதைப் பற்றி உங்கள் குழந்தையிடம் பேச முயற்சிக்கவும்.
குழந்தையிடம் பேசுங்கள்:
நீங்கள் உங்கள் வேலையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் உங்கள் டீன் ஏஜ் குழந்தையுடன் அவ்வப்போது பேசுவது மிகவும் அவசியம். உதாரணமாக, பள்ளியில் அவர்கள் நாள் முழுவதும் செய்த விஷயங்களை பற்றி கேட்கலாம், அவர்களது விருப்பு வெறுப்புகளை பற்றி அறிந்து கொள்ளலாம், இப்படி நீங்கள் செய்வதன் மூலம் அவர்கள் மீது உங்களுக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். இது தவிர குடும்பத்துடன் வெளியே எங்காவது செல்லுங்கள். அதற்கான நேரத்தையும் ஒதுக்குங்கள்.
குழந்தையின் நண்பனிடம் பேசுங்கள்:
உங்கள் டீனேஜ் குழந்தையிடம் ஏதாவது வித்தியாசத்தை நீங்கள் கவனித்தால் அவருடைய நடத்தையை புரிந்து கொள்ள முயற்சிக்கவும். தேவைப்பட்டால் அதைப்பற்றி உங்கள் குழந்தையின் நண்பர்களிடம் கூட கேட்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்கள் குழந்தை பற்றி ஏதாவது தெரிந்தால் உடனே கடிந்து கொள்ளாதீர்கள், அன்பாக பேசுங்கள். இதனால் உங்கள் குழந்தை எந்த தயக்கமும் பயமும் இல்லாமல் தங்களது உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
உடல் செயல்பாடுகளில் ஊக்குவித்தல்:
உங்கள் பிள்ளையை நீங்கள் விளையாட்டு, யோகா, உடற்பயிற்சி, நடைபெற்ற போன்றவற்றில் பங்கேற்க ஊக்குவிக்கவும். இதன் மூலம் அவர்களது மன அழுத்தம் குறைந்து நல்ல மனநிலைக்கு உதவும்.
மற்றவர்களுடன் ஒப்பிடாதே!
பெரும்பாலான பெற்றோர்கள் தெரிந்தே தெரியாமலோ இந்த தவறை செய்கிறார்கள். அதாவது தங்கள் குழந்தையை மற்ற குழந்தைகள் உடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். ஆனால் இப்படி செய்வது மிகவும் தவறு. இப்படி நீங்கள் செய்வதன் முழு முகங்கள் குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை உருவாகும். இதனால் அவர்கள் தங்கள் தன்னம்பிக்கையை இலக்கு நேரிடும். இது தவிர உங்கள் குழந்தை உங்களிடம் இருந்து தூரமாகி விடுவார்கள். எனவே உங்கள் குழந்தையை யாருடனும் ஒப்பிட்டுப் பேச வேண்டாம்.
இதையும் படிங்க: குழந்தைங்க இரவில் கண் விழித்து படிக்குறாங்களா? அப்ப 'இதை' பண்ணுங்க சூப்பர் பலன்கள்!!