கருவேப்பிலை துவையல்...எளிதாக எப்படி வீட்டில் தயார் செய்வது..? இப்படி ஒருமுறை செஞ்சு சாப்பிட்டு பாருங்க...

Published : Jul 28, 2022, 07:04 AM IST

Kariveppilai thuvaiyal: கருவேப்பிலை துவையல்...எளிதாக எப்படி வீட்டில் தயார் செய்வது..? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்

PREV
15
கருவேப்பிலை துவையல்...எளிதாக எப்படி வீட்டில் தயார் செய்வது..? இப்படி ஒருமுறை செஞ்சு சாப்பிட்டு பாருங்க...
Kariveppilai thuvaiyal:

நம்முடைய அன்றாட உணவில் பல்வேறு, மருத்துவ குணங்கள் நிறைந்த கருவேப்பிலை எடுத்து கொள்வது நல்லது. இது முடி உதிர்வை கட்டுப்படுத்துவதில் இருந்து உடலில் ஏற்படும் பலவகையான நோய்களுக்கும் கருவேப்பிலை உன்னத மருந்தாக பயன்படுகிறது. ஆனால் ஒரு சிலர்  சாப்பிடும் போது  உணவில் கருவேப்பிலை இருந்தால் ஒதுக்கி வைத்து விடுகிறோம். அதனால், கருவேப்பிலையின் சத்துக்கள் நம்முடைய உடலில் முழுமையாக கிடைக்காமல் போகிறது.

25
Kariveppilai thuvaiyal:

எனவே, சுவையான கருவேப்பிலை துவையல் செய்து சாப்பிட்டால் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இந்த துவையல் டிபன் வகைகளுக்கு மட்டுமல்லாமல், சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் டேஸ்டியாக இருக்கும். எனவே, கருவேப்பிலை துவையல் வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மேலும் படிக்க ....Vitamin b12: குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்...'வைட்டமின் பி12' நிறைந்த 3 சூப்பர் உணவுகள்..

35
Kariveppilai thuvaiyal:

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை இலைகள் – 2 கப்

சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

தனியா விதைகள் – இரண்டு  டீஸ்பூன்

இஞ்சி – சிறிதளவு

புளி – சிறிய  நெல்லிக்காய் அளவு

வெல்லம் – ஒரு சிறு துண்டு

 உப்பு – தேவையான அளவு

தேங்காய் துருவல்  -1/2 கப் 

உளுந்து – 2 டீஸ்பூன்

வர மிளகாய் – இரண்டு

மேலும் படிக்க ....Vitamin b12: குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்...'வைட்டமின் பி12' நிறைந்த 3 சூப்பர் உணவுகள்..

45
Kariveppilai thuvaiyal:


செய்முறை விளக்கம்:

1. அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் மிளகாய் தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் தனியா விதைகள் மற்றும் உளுந்து ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

2, பிறகு, இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேருங்கள். அவற்றுடன் பிரஷ்ஷான கருவேப்பிலை இலைகளை சேர்த்து நன்கு பிறகு, வதக்க வேண்டும். 

55
Kariveppilai thuvaiyal:

3. பிறகு அதனுடன் புளியை கொட்டை நீக்கி சேருங்கள். பின்னர் நன்கு வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். கருவேப்பிலை இலைகள் நன்கு ஆறியதும் இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன்  துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும். பிறகு இந்த துவையலுக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் முதலில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 

மேலும் படிக்க ....Vitamin b12: குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்...'வைட்டமின் பி12' நிறைந்த 3 சூப்பர் உணவுகள்..

அவ்வளவுதான் சுவையான கருவேப்பிலை துவையல் ரெடி..!  இதனை இட்லி, தோசை அல்லது சூடான சாதத்துடன் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்,செம்ம ருசியாக இருக்கும்.  

Read more Photos on
click me!

Recommended Stories