சத்தான உணவுகள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதின் மூலம், பல உடல்நலப் பிரச்சினைகளை கவனித்துக் கொள்கிறது. அந்த வகையில், இதய நோய், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வல்லமை காளானில் உள்ளது. காளான் இன்று பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகிறது. பீட்சா, சூப் அல்லது காளான்களின் வேறு எந்த உணவாக இருந்தாலும் சரி அது மிகவும் விரும்பி உட்கொள்ளப்படுகின்றது. இது ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
26
Mushroom Food:
காளான்:
காளானில் அழற்சி எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, கொழுப்பைக் குறைக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மேம்படுத்தும் பண்புகள் உள்ளன. இது இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. மேலும், புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. பொதுவாக, காளான்கள் நியாசின் வைட்டமின் பி3 மற்றும் ரிபோஃப்ளேவின் வைட்டமின் பி2 ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.
காளானில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. இதன் மூலம் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பைதருகிறது. மேலும் இதிலுள்ள வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் பி1 நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
46
High Cholesterol
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்:
காளானில் உள்ள பீட்டா குளுக்கன் ஒரு வகை உணவு நார்ச்சத்து ஆகும். இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது
காளான்கள் பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும். இது உடலில் சோடியத்தின் எதிர்மறை விளைவுகளை குறைக்க உதவுகிறது. இது இரத்த நாளங்களை தளர்த்துகிறது. இதன் காரணமாக இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
56
Mushroom Food:
இதய நோய்க்கு நல்லது
காளானில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், உடலை சேதப்படுத்தும் தீய விஷயங்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் இதில் இருக்கும் ஃபோலேட் அமிலம் கர்ப்பகாலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
காளானில் உள்ள பாலிசாக்கரைடுகள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும். கூடுதலாக, தோல் சுருக்கம், முகத்தில் கோடுகள் போன்ற வயது முதிர்வுக்கான பிரச்சனைகளை தடுக்கிறது. இது சருமத்தை தொற்றுநோயிலிருந்து பாதுகாத்து இளமையாக வைத்திருக்கும்.
மேலும், காளான் வாங்கும் போது, புதிய காளான் வாங்கி பயன்படுத்துங்கள். அதன் மேற்பரப்பு மென்மையாக இருக்கிறதா..? என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.