Ganesh Chaturthi 2022 special food in Tamil: விநாயகர் சதுர்த்தியை ஆரோக்கியத்துடன் சேர்த்து கொண்டாடுவதற்கு, குழந்தைகளுக்கு பிடித்த சுண்டல் ரெசிபியை இப்படி செய்து அசத்துங்கள்.
விநாயகர் சதுர்த்தி நாளில், கொழுக்கட்டை, சுண்டல், வடை போன்ற உணவு தானியங்களை பிள்ளையாருக்கு வைத்து பூஜை செய்து, உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்து மகிழ்வார்கள்.அதிலும், ஆரோக்கியம் நிறைந்த சுண்டல் ரெசிபி விநாயகப் பெருமானுக்கு விருப்பமானது. இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறை விளக்கம் தெரிந்து வைத்து கொள்வோம் வாருங்கள். இதை நீங்கள் வெள்ளை கொண்டைக்கடலை, கருப்பு கொண்டைக்கடலை என்ற எதில் வேண்டுமானாலும் செய்யலாம்.
முதலில் சுண்டலை முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ள வேண்டும். பின்னர் மறுநாள் காலை எழுந்து குக்கரில் சிறிது எண்ணெய் , உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு கடும், உளுந்து, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, சேர்த்து தாளித்து விடவும். பின்னர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
44
ganesh chaturthi 2022
பின்னர், அதனுடன் வேக வைத்த சுண்டலைச் சேர்த்துக் கிண்டவும், தேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். விநாயகருக்கு மிகவும் பிடித்தமான இந்த சுண்டல் ரெசிபியை விநாயகர் சதுர்த்தி நாளில் கட்டாயம் இப்படி செய்து அசத்துங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.