Idli Podi Recipe: கருப்பு உளுந்து கொண்டு ருசியும், மணமும் கொண்ட, குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய ஆரோக்கியமான இட்லி பொடி எப்படி செய்வது? என்பதை இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
நார் சத்து மிகுந்த கருவேப்பிலை மற்றும் கருப்பு உளுந்து பெண்கள், குழந்தைகளுக்கு ரொம்பவும் நல்லது. பெண்கள், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் தரும், கருப்பு உளுந்து கொண்டு ருசியும், மணமும் கொண்ட, ஆரோக்கியமான இட்லி பொடி எப்படி செய்வது? என்பதை இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
1. முதலில் அடுப்பில் ஒரு பெரிய அடி கனமானபாத்திரம் ஒன்றை வைத்து, அதில் ஒரு ஸ்பூன் மட்டும் எண்ணெய் விட்டு வர மிளகாய்களை போட்டு பொன் நிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.
2. பின்பு அதில் கடலை பருப்பை, அதன் பிறகு மிளகு, அடுத்து துவரம் பருப்பு சேர்த்து ஒவ்வொன்றாக வறுத்துக் எடுத்து கொள்ள வேண்டும். இந்த எல்லா பொருட்களையும் தனித்தனியாக வறுத்து எடுத்த பின்பு தோலுடன் கூடிய முழு கருப்பு உளுந்தை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.
44
Idli Podi Recipe:
3. பின்னர் இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். பின்னர் இதை கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் சத்துள்ள, சுவையான இட்லி பொடி தயார்..! இதை ஆறு மாதம் வரை வைத்து பயன்படுத்தினாலும், கொஞ்சம் கூட கெட்டுப் போகாது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.