கிவி பழம், பார்ப்பதற்கு பச்சையாக சிறிய கருப்பு விதைகள் கொண்டு இருக்கும். இதன் சுவை, ஸ்ட்ராபெர்ரிகள், முலாம்பழம் மற்றும் வாழைப்பழங்களின் கலவையான கலவையாகும். ஆரோக்கியமாகவும், உடல் அழகை மேம்படுத்த தேவையான அனைத்து சத்துகளும் இதில் பரிபூரணமாக உள்ளது. கிவியில் வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும்,இரும்புச்சத்து மற்றும் குறைந்த கலோரி கொண்ட கிவி, உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் ஏற்றது.