Sani Peyarchi 2022: சனி அமாவாசையில் உச்சம் பெறும் சனி பகவான்..சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்..

First Published | Aug 25, 2022, 8:06 AM IST

Sani Peyarchi 2022 Palangal: சனிக்கிழமையில் வரும் சனி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் சனிபகவானின் கொடூர பார்வையில் இருந்து தப்பிக்கும் ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

shani rashi parivartan 2022

ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வருகிறது. இருப்பினும், சனிக்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சில நேரம் சனி பகவான் கொடூர பார்வையும் இந்த நாளில் குறிப்பிட்ட ராசிகள் மேல் விழுகிறது. இந்த நாளில், சனி கிரகம் அதன் சொந்த ராசியான மகரத்தில் இருக்கும். சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாலும், இந்த அமாவாசை அன்றும் சனி தனது சொந்த ராசியில் மகர ராசியில் இருப்பார். மகர ராசியில் சனி வக்ர நிலையில் சஞ்சரிப்பதால், சனியின் ஏழரை நாட்டு, சனி திசை குறிப்பிட்ட ராசிகளின் பக்கம் விழுகிறது. இதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள் பற்றி பார்ப்போம்.

 மேலும் படிக்க...Sevvai Peyarchi: செவ்வாய் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு அடுத்த 67 நாட்களுக்கு முழு பலன் உண்டு, உங்கள் ராசி என்ன

shani rashi parivartan 2022

மகரம்:

மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் வக்கிர பெயர்ச்சி அசுப பலன்களை கொடுக்கும்.  இந்த நேரத்தில் தொழிலில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது, இல்லையெனில் கடும் சிக்கலை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் பண இழப்பு ஏற்படலாம். மேலும், குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம்.. திருமண வாழ்க்கையில் தவறான புரிதல்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். 

 மேலும் படிக்க...Sevvai Peyarchi: செவ்வாய் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு அடுத்த 67 நாட்களுக்கு முழு பலன் உண்டு, உங்கள் ராசி என்ன

Tap to resize

shani rashi parivartan 2022

கும்பம் 

கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு, திடீர் பிரச்சனைகள் வரலாம். நிதி நிலைமையில் மோசமான விளைவு ஏற்படலாம், வருமானம் குறையக்கூடும். திடீர் விபத்துகள் ஏற்படலாம், வெளியே செல்லும் போது எச்சரிக்கை அவசியம். முடிந்த வரை இந்த நேரத்தில் எந்த விஷயத்திலும் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த காலத்தில் செலவுகள் ஏற்படும்.

shani rashi parivartan 2022

தனுசு 

மகர ராசியில் பிறந்தவர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தை எதிர் கொண்டுள்ளனர். இந்த நேரம் உங்கள் தொழிலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் பண இழப்பும் ஏற்படலாம். இந்த நேரம் இந்த நபர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம்.குடும்ப உறவுகளிலும், காதல் உறவுகளிலும் சிக்கல் ஏற்படலாம். முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். 

 மேலும் படிக்க...Sevvai Peyarchi: செவ்வாய் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு அடுத்த 67 நாட்களுக்கு முழு பலன் உண்டு, உங்கள் ராசி என்ன

Latest Videos

click me!