Healthy Food: குறைந்த கலோரிகள் கொண்ட காலை உணவுகள் லிஸ்ட் ..! உடல் எடையை குறைக்க இது தான் பெஸ்ட்..

First Published Aug 25, 2022, 9:49 AM IST

Healthy Food: உடல் எடை குறைந்து உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உங்களுடைய காலை உணவில் குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்து கொள்வது அவசியம்.

Health Food

இன்றைய மோசமான உணவு பழக்கவழக்கம் மற்றும் வாழ்கை முறை மாற்றம் ஒருவருக்கு பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளை கொடுக்கிறது. குறிப்பாக, உடல் எடை அதிகரிப்பு, நீரழிவு பிரச்சனை, இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஒருவருக்கு இளம் வயதிலேயே வந்து விடுகிறது. இதில்,  'ஒபிசிட்டி' பிரச்சனையால் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பாதிப்படுகின்றனர். இப்போது, எந்த பக்கம் திரும்பினாலும், உடற்பயிற்சி கூடங்கள் இருக்கின்றன. 
 

health food

இந்த உடல் எடை அதிகரிப்பிற்கு, பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் வகை உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் மிக பெரிய காரணமாக உள்ளது. எனவே, நீங்கள் இதற்கு மாற்றாக உங்களுடைய உணவில் குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்து கொள்வது அவசியம். எனவே, அவற்றில் சில வற்றை இங்கு பார்த்து கொள்வோம்.
 

ஆம்லெட்:

 முட்டை காலை உணவாக எடுத்து கொள்ளலாம். முட்டையில் உள்ள அமினோ அமிலங்கள் தசை திசுக்களை மீண்டும் உருவாக்க உதவுகிறது. இதிலுள்ள ஊட்டச்சத்து நிறைந்த புரதம், வேலை செய்யும் போது இழந்த ஆற்றலை திரும்பப் பெற உதவுகிறது. இதனால், ஆரோக்கியத்துடன் உடல் எடையையும் குறைக்கலாம்.

மேலும் படிக்க...Sani Peyarchi 2022: சனி அமாவாசையில் உச்சம் பெறும் சனி பகவான்..சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்..

omlet

எப்படி சாப்பிடலாம்..?

முட்டையை அவிழ்த்து அப்படியே சாப்பிடலாம். இல்லையென்றால், முட்டையின் வெள்ளைக் கருவுடன் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் காளான் ஆகியவற்றை சேர்த்து செய்த ஆம்லெட்டை காலை உணவாக எடுக்கலாம். 

முளைகட்டிய பயிறு:

இதில் உள்ள நார்சத்து மற்றும் கலோரிகள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பச்சைப்பயறில் இரும்பு, புரோட்டீன், கார்போஹைட்ரேட், பைபர், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இது சிறந்த ஆக்சிஜனேற்றியாகவும் உள்ளது, மேலும், கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. 

Soya Bean Parantha

எப்படி சாப்பிடலாம்:

பச்சை பாசி பயிறை முளைகட்டி சாப்பிடலாம். வேண்டும் என்றால், சுண்டல் போன்றவற்றையும் முளைகட்டி  வைத்து சாப்பிடலாம். இல்லையென்றால், முதல் நாள் இரவு ஊறவைத்த பச்சைப் பயறுடன், துருவிய தேங்காய், கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து காலையில் தோசையாக செய்து சாப்பிடலாம்.

ஓட்ஸ்:

ஓட்ஸில் குறைவான கலோரிகள், அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு காலை உணவுக்கு இந்த ஓட்ஸ் இட்லி ஏற்றது. இதனால், உடல் பருமனை மட்டுமின்றி நீரிழிவு பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கிறது. இட்லியாக இல்லாவிட்டால், பாதாம் பால் மற்றும் ஓட்ஸை ஸ்மூத்தியாக செய்து 'ஹெல்த்தி டிரிங்க்' ஆக குடிக்கலாம்.

மேலும் படிக்க...Sani Peyarchi 2022: சனி அமாவாசையில் உச்சம் பெறும் சனி பகவான்..சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்..

கம்பு தோசை

சிறுதானியங்களில் ஒன்றான கம்பு உடல் எடையை  குறைத்து ஆரோக்கியமாக இருப்பதற்கு பெரும் பங்கு வகிக்கிறது. இதில் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள்  நிறைந்துள்ளன.இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்.


மேலும் படிக்க...Sani Peyarchi 2022: சனி அமாவாசையில் உச்சம் பெறும் சனி பகவான்..சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்..

oats dosa

எப்படி சாப்பிடலாம்..?

கம்பங்கூழ், புட்டு, ரொட்டி, கம்பு தோசை என ஏதாவது ஒரு வகையில் கம்பை உங்கள் உணவில் சேர்க்கலாம். வேண்டும் என்றால், சாதாரணமாக தோசை மாவு அரைக்கும் போது அதில் ஒரு பங்கு ஊறவைத்த கம்பையும் சேர்க்கலாம்.

click me!