How to maintain dosa: தோசை கல்லில் மாவு ஒட்டிக் கொள்கிறதா? இந்த சிம்பிள் டிப்ஸ பாலோ பண்ணுங்க.!!

First Published May 31, 2023, 4:32 PM IST

நீங்கள் இரும்பு தவாவில் தோசை சுடும் போது மாவு கல்லில் ஒட்டிக் கொள்கிறதா? இனி கவலை வேண்டாம். பதிவில் உள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்.

பெரும்பாலானோர் காலை உணவாக அதிகம் விரும்பி சாப்பிடுவது தோசை. அதுவும் தோசையை இரும்பு தவாவில் சுட்டு சாப்பிட்டால் தனி சுவை கிடைக்கும். ஆனால் அதை சரியான முறையில் பராமரித்தால் தான் தோசை நன்கு வரும். இல்லை என்றால் ஒழுங்கான முறையில் தோசை வராது. எனவே தான் இதனை பராமரிக்க சிரமப்படுவோர் நான் ஸ்டிக் தவாவை பயன்படுத்துகின்றன. ஆனால் சில குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இனி இரும்பு கல்லில் சுவையான தோசை சுட்டு சாப்பிடலாம்.

தோசை சுடும் முன் கல்லை சுத்தம் செய்யவும்:

நீங்கள் தோசை கல்லில் தோசை சுடும் முன்னர் கல்லை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் தோசை கல்லில் படிந்து இருக்கும் தூசு, கடைசியாக நீங்கள் சுட்ட தோசையின் மிச்சம் மற்றும் அடிபிடித்த துகள்கள் போன்றவை இருக்கும். அதனை முற்றிலுமாக நீக்கி சுத்தம் செய்யுங்கள். குறிப்பாக சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் கரண்டியைக் கொண்டு கல்லில் தேய்க்க கூடாது. அவ்வாறு தேய்த்தால் கல்லில் கீறல் விழுந்து தோசை வராது. ஆகையால் காட்டன் துணி ஒன்றினை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.
 

dosa

வெங்காயம் அல்லது உருளைக்கிழங்கு பயன்படுத்தவும்:

கல்லை சுத்தம் செய்த பின்னர், கால் பகுதி உருளைக்கிழங்கு அல்லது வெங்காயத்தை நறுக்கி எண்ணெயில் முக்கி தோசை கல்லில் நன்கு தேய்க்க வேண்டும். அதிகளவு எண்ணெய் விட்டு தேய்க்க வேண்டாம். ஏனெனில்
தோசை மாவு கல்லில் ஒட்டாது. ஆகையால் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு கல் முழுவதும் தேய்க்கவும். பின் மாவு ஊற்றி தோசை சுட்டு சாப்பிடுங்கள். இவ்வாறு செய்தால் தோசை அழகாக ஒட்டாமல் வரும்.

மாவை ஃபிரிட்ஜிலிருந்து எடுத்தவுடன் பயன்படுத்தக் கூடாது:

பெரும்பாலானோர் செய்யும் தவறு என்னவென்றால் பிரிட்ஜில் இருந்து எடுத்த மாவை உடனே தோசை சுட ஆரம்பிப்பார்கள். இந்த பழக்கம் தவறானது. பிரிட்ஜில் இருந்து எடுத்த மாவை குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வெளியே இருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தோசை கல்லில் ஒட்டாமல் நன்றாக வரும்.

தண்ணீர் ஊற்றும் போது கவனம் தேவை:

நீங்கள் சுடும் தோசை சரியாக வராததற்கு தண்ணீர் பதம் சரியாக இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம். நீங்கள் தோசை சுட வேண்டும் என்று நினைத்தால் மாவில் அதிகளவு தண்ணீர் ஊற்றக்கூடாது. அவ்வாறு ஊற்றினால் தோசை கல்லில் ஒட்டிக்கொள்ளும். எனவே தோசை சுடும் போது மாவு சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.

எண்ணெய் அதிகம் பயன்படுத்த வேண்டாம்:

அதிக அளவு எண்ணெய் தேய்த்து தோசை சுட்டால் தோசை ஒழுங்காக வராது. கல்லில் மாவு ஒட்டிக் கொள்ளும். எனவே இந்த தவறை செய்யாதீங்க.

இதையும் படிங்க: Ration kadai palm oil:ரேஷன் கடை பாமாயிலில் இருக்கும் அதிகப்படியான பித்தத்தை ஈஸியா வெளியே எடுக்க சூப்பர் டிப்ஸ்

தோசைக்கல்லை தேய்க்க வேண்டாம்:

தோசைக்கல்லை அடிக்கடி தேய்க்க கூடாது. அவ்வாறு செய்தால் தோசை வராது. நீங்கள் தோசை சுட்ட பிறகு காட்டன் துணியால் அதனை துடைத்து ஒரு தட்டுபோட்டு மூடி வைக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தேய்த்தால் போதும். தேய்க்கும் போது சோப்பு ஆயிலை கையில் ஊற்றி தேய்க்க வேண்டும். குறிப்பாக ஸ்கிரப் கொண்டு தேய்க்க கூடாது. அவ்வாறு செய்தால் தோசைக் கீரல் விழுந்து தோசை வராமல் போகும். தோசை கல்லில் ஈரம் காய்ந்ததும் ஒரு துளி எண்ணெயை கல்லில் தடவவும். ஏனெனில் தோசைக்கல்லில் எப்போதும் ஈரத் தன்மை இருக்க வேண்டும். அப்போதுதான் தோசை நன்றாக வரும்.

click me!