
குளிர்காலத்தில் குழந்தையின் சருமம் வறண்டு போனாலோ அல்லது அவர்கள் அழும்போது கண்ணில் இருந்து கண்ணீர் வரவில்லை என்றாலோ, அவர்களுக்கு உடனே குடிப்பதற்கு தண்ணீர் அல்லது வேறு ஏதாவது பானம் கொடுக்க வேண்டும். இவை நீரிழிப்புக்காண தீவிர அறிகுறியாகும். இந்த சீசனில்
குழந்தைகளின் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். குழந்தைகளின் உடலில் போதிய அளவு நீர் இல்லை என்றால், அவர்களது உடல் சரியாக செயல்படாது. அவர்கள் எப்போதும் மந்தமாகவே இருப்பார்கள்.
ஆனால், குளிர்காலத்தில் குழந்தைகள் தண்ணீர் அதிகமாக குடிக்க மாட்டார்கள். அவர்கள் சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்றால் அவர்களது ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். எனவே குளிர்காலத்தில் குழந்தைகளின் ஆற்றலை பராமரிக்காகவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், உடலில் வெப்பநிலையை சீராக்காவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடல் ரீதியான செயல்பாடுகளை சரியாக பராமரிக்கவும், அவர்களது உடலை ஆரோக்கியமாக வைக்கவும் அவர்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கொடுப்பது மிகவும் அவசியம். எனவே குளிர்காலத்தில் குழந்தைகளை நீரேற்றமாக வைக்க சில வழிகள் இங்கே.
இதையும் படிங்க: குழந்தைகளோட ரொம்ப நேரம் செலவிட முடியலயா? இந்த '1' விஷயம் பண்ணா போதும்!!
வெந்நீர்:
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு சாதாரண தண்ணீருக்கு பதிலாக சூடான நீர் குடிக்க கொடுங்கள். இது தவிர மூலிகை டீ போன்ற ஆரோக்கிய பானங்களையும் கொடுக்கலாம். இது அவர்களை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமின்றி, அவர்களது உடலை வெப்பமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்கும்.
நீச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள்:
குளிர்காலத்தில் குழந்தைகளை நீரேற்றமாக வைக்க நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அவர்களுக்கு கொடுக்கலாம். உதாரணமாக ஆரஞ்சு, வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவையாகும்.
இதையும் படிங்க: இரவில் குழந்தைங்க துணிய வெளியில் காய போடாதீங்க... அறிவியல் காரணமே இருக்கு!!
சூப்:
குளிர்காலத்தில் உங்கள் குழந்தையை சூடாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க விரும்பினால் அவர்களுக்கு சூப் கொடுப்பது சிறந்த தேர்வாகும். உங்கள் குழந்தை சைவம் விரும்பி சாப்பிட்டால் காய்கறிகளில் சூப் செய்து கொடுங்கள். அதுவே அசைவம் சாப்பிட்டால் சிக்கன் சூப், மட்டன் சூப் கொடுக்கலாம். இவை சத்தானவை மட்டுமின்றி, நீரேற்றமாகவும் வைக்கும்.
அடிக்கடி தண்ணீர் கொடுங்கள்:
குளிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு தாகம் எடுக்காவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும். சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால் அவர்களது உடல் நீரேற்றமாக இருக்கும்.
ஜூஸ்:
தண்ணீர், சூப் தவிர ஏதாவது ஒரு பழத்தில் ஜூஸ் செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள். அது அவர்களை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமின்றி, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் அவர்களுக்கு வழங்கும்.
நினைவில் கொள்:
- குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கடையில் விற்கும் கூல் ட்ரிங்ஸ் போன்ற எதையும் கொடுக்க வேண்டாம்.
- அதுபோல அவர்கள் கண்ணில் படும்படி வாட்டர் பாட்டில் வைக்க வேண்டும். இது அவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்கும்படி நினைவூட்டும்.
- குளிர்காலத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு முன் மற்றும் பின் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க கொடுங்கள்.
- குளிர்காலத்தில் நீரிழப்பு பிரச்சனையில் இருந்து அவர்களை பாதுகாக்க தாய்ப்பால் கொடுங்கள். இது அவர்களது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.