ஓட்ஸை இப்படி சேமிங்க; கெட்டுப் போகாமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும்!!

Published : Feb 12, 2025, 10:34 AM IST

Oats Storage Tips : ஓட்ஸ் கெட்டுப் போகாமல் நீண்ட நாள் ஃபிரஷாக வைத்திருக்க எப்படி சேமிப்பது என்று இங்கு காணலாம்.

PREV
15
ஓட்ஸை இப்படி சேமிங்க; கெட்டுப் போகாமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும்!!
ஓட்ஸை இப்படி சேமிங்க; கெட்டுப் போகாமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும்!!

ஓட்ஸ் ஆரோக்கியமான மற்றும் பலரது விருப்பமான காலை உணவாகும். ஓட்ஸை பலர் தங்களுக்கு பிடித்த வகைகளில் எடுத்துக் கொள்கிறார்கள். ஓட்ஸில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது ரொம்பவே நல்லது. இதனால்தான் பெரும்பாலானோர் இது அதிக அளவில் வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இதுவும் மற்ற உணவுகளைப் போலவே முறையாக சேமிக்காவிட்டால் சீக்கிரமே கெட்டுவிடும். எனவே ஓட்ஸ் கெட்டுப் போகாமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக வைத்திருக்க அதை எப்படி சேமிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

25
ஓட்ஸ் கெட்டு போகுமா?

ஆம், மற்ற உணவுகளைப் போலவே ஓட்ஸையும் சரியான முறையில் சேமிக்காவிட்டால் அது விரைவில் கெட்டுவிடும். உலர்ந்த ஓட்ஸில் ஈரப்பதம் குறைவாகவே இருப்பதால் அவை கெட்டுப் போகும் வாய்ப்பு ரொம்பவே குறைவு. ஆனால், நிலையான காற்று, வெளிச்சம், ஈரப்பதம் மற்றும் வெப்பத்திற்கு ஆளானால் அதுவும் கெட்டுப் போய், அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களை இழந்து விடும். உண்மையில், ஓட்ஸை சரியான முறையில் சேமிக்கப்படாவிட்டால் பூஞ்சைகள், பூச்சிகள் அதில் வரக்கூடும். மேலும் அது அதன் உண்மையான சுவையை இழந்து, கசப்பான சுவை தரும். எனவே நீங்கள் நீண்ட நாள் பயன்படுத்தாமல் இருந்த ஓட்ஸை பயன்படுத்தும் முன் அதை பரிசோதிப்பது முக்கியம்.

35
காற்று புகாத டப்பாக்கள்:

ஓட்ஸை நீண்ட நாள் பிரஷ்ஷாக வைத்திருக்க எளிய வழி என்னவென்றால் அதை காற்று போகாத கண்ணாடி டப்பாவில் போட்டு சேமிக்கவும். ஏனெனில் கோட்ஸ் இன் தரலாம் மோசம் அடைவதை தடுக்கவும், காற்றில் இருந்து அவற்றை பாதுகாக்கவும், ஒட்டில் ஈரப்பதம் நுழைவதை தடுக்கவும், அதை நீங்கள் கண்ணாடி ஜார், பிளாஸ்டிக் டப்பா அல்லது ஜிப் லாக் பையில் வைத்து சேமிக்கலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால் அதை காற்று, ஈரப்பதம் மற்றும் பூச்சிகளிலிருந்து விலக்கி வைக்கவும்.

இதையும் படிங்க:  ட்ரை ஃப்ரூட்ஸ் கெட்டுப்போகாமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்க இதோ டிப்ஸ்..!!

45
குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் சேமிக்கலாம்:

ஓட்ஸை நேரடியான சூரிய ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து விலக்கி வைக்கவும். அதற்கு பதிலாக குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் வைத்து சேமிக்கலாம். ஓட்ஸின் மீது வெப்பம் படும்போது அது அதன் சுவையையும், ஊட்டச்சத்துக்களையும் இழந்து விடும். இதனால் அது பழுப்பு நிறமாக மாறிவிடும்.

இதையும் படிங்க:  பச்சை மிளகாய் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமா? இத மட்டும் செய்யுங்க!!

55
ஃப்ரீசரில் சேமிக்கலாம் :

நீங்கள் ஓட்ஸை மொத்தமாக வாங்கிவிட்டால், அவற்றை சேமிக்க சிறந்த வழி ஃப்ரீசரில் வைப்பது தான். இந்த வழியில் நீங்கள் ஓட்ஸை சேமித்தால் ஒரு வருடம் ஆனாலும் பிரஷ்ஷாக இருக்கும். இதற்கு ஓட்ஸை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அதை ஃப்ரீசரில் வைத்து சேமிக்கலாம். இந்த முறையில் சேமித்தால் ஓட்ஸில் பூச்சிகள் தொல்லை வராது, நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும். ஃப்ரீசரில் வைக்க விரும்பாவிட்டால் பிரிட்ஜில் வைத்தும் சேமிக்கலாம். ஆனால் ஓட்ஸ் டப்பாவின் மூடியை இறுக்கமாக மூட மறந்து விடாதீர்கள்.

நினைவில் கொள் : ஓட்ஸ் சரியான முறையில் சேமிக்காவிட்டால் அவற்றில் பூச்சிகள், பூஞ்சைகள் வந்துவிடும். எனவே நீங்கள் வாங்கிய பிறகு அவற்றை
அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். அவற்றில் துர்நாற்றம் வீசினாலோ அல்லது வித்தியாசமாக தெரிந்தாலோ உடனே தூக்கி எறிவது தான் நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories