Fake Indian Currency: கள்ள நோட்டுகள் அதிகரிப்பு..போலி 500 ரூபாய் நோட்டுகளை சுலபமாக கண்டறிவது எப்படி..?

Published : Sep 04, 2022, 01:22 PM IST

Fake Indian Currency: கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதால், ரூபாய் நோட்டுகள் வாங்குவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

PREV
15
Fake Indian Currency: கள்ள நோட்டுகள் அதிகரிப்பு..போலி 500 ரூபாய் நோட்டுகளை சுலபமாக கண்டறிவது எப்படி..?

கடந்த 2021 ஆம் ஆண்டில், 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுக்கள் 54 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதில் 500 ரூபாய் நோட்டுகள் 102 சதவீதமும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 54 சதவீதமும், 10 ரூபாய் நோட்டுகள் 16.4 சதவீதமும், 200 ரூபாய் கள்ள நோட்டுகள் 11.7 சதவீதமும் அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

 

25

இது, கடந்த 2020 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாகும். எனவே, இந்திய சந்தையில் கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவதால், ரூபாய் நோட்டுக்களை வாங்கும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றது. மேலும், போலி ரூபாய் நோட்டுகளை கண்டறிவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க...2 கிலோ பூண்டை கைப்படாமல் இப்படி ஈஸியா 1 நிமிடத்தில் உரித்து....6 மாதம் ஆனாலும் இப்படி ஸ்டோர் பண்ணி வைக்கலாம்..


 

35
Fake Currency

 

ரூபாய் நோட்டின் முன் பக்கம்:

தேவநாகரி எழுத்தில் 500 எழுதப் பட்டிருப்பதையும் பார்க்கலாம்.

வலது புறம் மையத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும்.

நோட்டை லேசாக வளைத்தால், பாதுகாப்பு நூலின் நிறம் பச்சை நிறத்தில் இருந்து நீலமாக மாறுவதைக் காணலாம்.

ஆளுநரின் கையொப்பம், உத்தரவாதப் பிரிவு, வாக்குறுதி விதி மற்றும் RBI லோகோ ஆகியவை இப்போது வலது பக்கமாக மாற்றப்பட்டுள்ளன.

மகாத்மா காந்தியின் புகைப்படம் மற்றும் எலக்ட்ரோ டைப் வாட்டர் மார்க் ஆகியவையும் தெரியும்.

மேல் இடது பக்கம் மற்றும் கீழ் வலது பக்கம் உள்ள எண்கள் இடமிருந்து வலமாக அதிகரிக்கும்.

45

நோட்டின் வலது பக்கம்:

நோட்டின் வலது பக்கத்தில் அசோக தூண் இருக்கும்.

வலது பக்க வட்டப் பெட்டியில் 500 என்று எழுதப்பட்டிருக்கும்.

ரூபாயின் நோட்டின் மையத்தில் மொழி பட்டியல் இருக்கும்.

வலது மற்றும் இடது புறம் உள்ள 5 ப்ளீட் வரிகள் உயர்த்தப்பட்ட அச்சில் இருக்கும்.


மேலும் படிக்க...2 கிலோ பூண்டை கைப்படாமல் இப்படி ஈஸியா 1 நிமிடத்தில் உரித்து....6 மாதம் ஆனாலும் இப்படி ஸ்டோர் பண்ணி வைக்கலாம்..


 

55

ரூபாய் நோட்டின் பின் பக்கம்:

நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டினை  நீங்கள் சரி பார்க்கலாம்.

ஸ்வச் பாரத் லோகோ வாசகத்துடன் அச்சிடப்பட்டுள்ளது.

மத்தியில் மொழிகளின் பேனல்.

இந்தியக் கொடியுடன் செங்கோட்டையின் படம் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...2 கிலோ பூண்டை கைப்படாமல் இப்படி ஈஸியா 1 நிமிடத்தில் உரித்து....6 மாதம் ஆனாலும் இப்படி ஸ்டோர் பண்ணி வைக்கலாம்..

Read more Photos on
click me!

Recommended Stories