
குழந்தைகளை சீக்கிரமே தூங்க வைப்பது பெற்றோரின் ஒரு பெரிய வேலையாகும். ஏனெனில் குழந்தைகள் பகல் முழுவதும் விளையாடினால் இரவில் சரியான நேரத்தில் தூங்க மாட்டார்கள். இதனால் பெற்றோரின் தூக்கமும் கெடும். மேலும் குழந்தை தூங்காமல் இரவு வெகு நேர விழித்திருந்தால் அது தாய் மற்றும் குழந்தை இருவரின் வழக்கமும் பாதிக்கப்படும். தாமதமாக தூங்குவதும் தாமதமாக எழுவதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குழந்தைகள் சீக்கிரமே தூங்கினால் அவர்களது வளர்ச்சி ஹார்மோன்கள் சரியாக வேலை செய்வது மட்டுமின்றி, அவர்கள் உடல் வளர்ச்சியும் மேம்படும்.
எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இரவு 9 முதல் 10 மணிக்குள் தூங்க வைக்க வேண்டும். அதுபோல காலை 7 மணி முதல் 8 மணி வரை தூக்கம் நிறைவடைய வேண்டும். இதனால் குழந்தையின் செறிவு அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும் மற்றும் ஆரோக்கியமாக இருக்கும். அதுவே குழந்தை சரியாக தூங்கவில்லை என்றால் எரிச்சலடையும் மற்றும் குழந்தையை நடத்தையில் மாற்றம் ஏற்படும். இதுதவிர மனசோர்வு, பதட்டம் போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் குழந்தை இரவு தூங்காமல் வெகுநேரம் விழித்திருந்தால் சரியான நேரத்தில் குழந்தையை தூங்க வைக்க சில உதவிக்குறிப்புகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: குழந்தைகளைத் தூங்க வைக்கும் முன் பெற்றோர் இதை செய்யவே கூடாது! அவர்களின் மனநிலையை பாதிக்கும்!
ஒரே நேரத்தில் தூங்குவது:
குழந்தைகள் தூங்குவதற்கு ஒரே வழக்கத்தை பின்பற்றினால் அவர்கள் தினமும் சீக்கிரமாகவே தூங்குவார்கள். உதாரணமாக இரவு 9 மணி முதல் காலை 7-8 மணிநேர தூங்கும் நேரத்தை முடிவு செய்துவிட்டால், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
மனதை அமைதியாக்குங்கள்:
உங்கள் குழந்தை தூங்கும் முன் அவர்களது மனதை அமைதியாகுங்கள். அதற்கு பிடித்த கதை, இனிமையான பாடல் போன்ற ஏதாவது ஒன்றை அவர்களுக்கு பழக்கப்படுத்துங்கள். ஒருவேளை உங்கள் குழந்தை படுத்த பிறகும் தூங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள் என்றால், அவர்களது மனம் அமைதியாக இல்லை என்று அர்த்தம்.
இதையும் படிங்க: இந்த '5' உணவுகள் கொடுங்க; குழந்தைங்க தொல்லை பண்ணாம சீக்கிரமே தூங்கிருவாங்க!
மதியம் தூங்குவதை பழக்கப்படுத்தாதீங்க!
குழந்தைக்கு மூன்று முதல் ஐந்து வயதிலேயே மதியம் தூங்குவதை பழக்கப்படுத்தாதீர்கள். ஒருவேளை தூங்க விரும்பினால் அரை மணி நேரத்திற்கு மேல் தூங்க வைக்க வேண்டாம். ஏனெனில் குழந்தை மதியம் நீண்ட நேரம் தூங்கினால் இரவு நேரத்தில் தூங்குவதற்கு சிரமமாக உணர்வார்கள்.
பாதுகாப்பான சூழல் அவசியம்:
பொதுவாக சின்ன குழந்தைகள் தனியாக தூங்க பயப்படுவார்கள். அதுவும் குறிப்பாக இருட்டு என்றால் அவர்களுக்கு ரொம்பவே பயம். மேலும் பயம் காரணமாக குழந்தைகள் இரவில் தூங்க மாட்டார்கள். எனவே குழந்தை தூங்கும் முன் அவர்களை பயமுறுத்தும் எந்த ஒரு விஷயங்களையும் பார்க்க அனுமதிக்க வேண்டாம். அதுபோல குழந்தை தூங்கும் அறை எந்தவித இரைச்சலுமொன்றி அமைதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தையால் இரவு நிம்மதியாக தூங்க முடியும்.
இரவு ஆரோக்கியமான உணவு கொடுங்கள்:
குழந்தைக்கு இரவு நேரத்தில் ஆரோக்கியமான உணவை சாப்பிட கொடுங்கள். அதுவும் குறிப்பாக அவர்களை 7-8 மணிக்குள் சாப்பிட பழக்கப்படுத்தி விடுங்கள். ஒருவேளை தாமதமாக சாப்பிட்டால் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதனால் குழந்தைகள் இரவு தூங்குவதில் சிக்கல் ஏற்படும். மேலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட கொடுக்க வேண்டாம். முக்கியமாக டீ காபி ஒருபோதும் கொடுக்காதீர்கள்.
குழந்தையின் அறையில் கடிகாரம் வைக்காதே!
குழந்தை தூங்கும் அருகில் ஒருபோதும் கடிகாரத்தை வைக்க வேண்டாம். ஏனெனில் குழந்தை அதை பார்த்துக்கொண்டு எப்போது தூங்கலாம் என்று இருக்கும். அதுபோல காலையில் அலாரம் அடித்தால் பதறி எழுந்து விடுவார்கள். குழந்தை தூங்குவதற்கு நேரம் முக்கியமல்ல, தூக்கத்தின் தரம் தான் மிகவும் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.