
அக்குள் கருமையாக இருப்பது ஒரு பொதுவான பிரச்சினை. இந்த பிரச்சினையால் பெண்கள் ரொம்பவே சிரமப்படுகிறார்கள். எந்த அளவிற்கு என்றால், ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிவதைக் கூட தவிர்க்கிறார்கள். ரேஸர் செய்தல், ஷேவிங் செய்தல் அல்லது ஹார்மோன் சமநிலை போன்ற பல காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்படலாம் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். இருப்பினும், சில வீட்டு வைத்தியங்கள் மூலம் இந்த பிரச்சினையை சுலபமாக சரி செய்து விடலாம். அது என்ன என்று இப்போது இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
எலுமிச்சை சாறு:
எலுமிச்சையில் சிற்றுக்க அமலம் இருப்பதால் அது சருமத்தில் நிறத்தை உதவுகிறது இதற்கு ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை அக்குளில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
பேக்கிங் சோடா :
பேக்கிங் சோடா ஒரு இயற்கையான ஸ்க்ரப்பர். இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் எண்ணிக்கை சருமத்தை மென்மையாக உதவுகிறது. இதற்கு பேக்கிங் சோடாவில் சிறிதளவு தண்ணீர் கலந்து பேஸ்ட் போலாக்கி அதை அக்குளில் தடவி, சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
இதையும் படிங்க: குளித்த பிறகும் வியர்வை நாற்றம் அடிக்குதா? உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ் இதோ!
மஞ்சள்:
மஞ்சளில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி செப்டிக் பண்புகள் உள்ளன. அவை சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கவும், சுத்தமாக வைக்கவும் உதவுகிறது. இதற்கு மஞ்சளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அந்த பேஸ்ட்டை அக்குளில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
சந்தன பொடி:
சந்தனம் சருமத்திற்கு குளிர்ச்சியையும், நிறத்தையும் கொடுக்கும். இதற்கு சந்தன பொடியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அந்த பேஸ்ட்டை அக்குளில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
தேன்:
எதிர்ப்பு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது சருமத்தை பாக்ரியாக்களில் இருந்து பாதுகாக்கிறது. எனவே தேனை அக்குளில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு தண்ணீரால் கழுவ வேண்டும்.
இதையும் படிங்க: அக்குள் கருப்பா அசிங்கமா இருக்கா.. தயிர் மட்டும் போதும்.. வெறும் 5 நிமிடங்களில் மாறும் அதிசயம்
நினைவில் கொள்:
- அக்குளில் கருமை வராமல் இருக்க ஷேவிங் செய்த பிறகு மாய்ஸ்ரைஸ் பயன்படுத்த மறக்காதீர்கள்.
- அக்குளில் இருக்கும் இறந்த சரும செல்களை அகற்ற வாரத்திற்கு ஒரு முறை ஷேவிங் செய்ய வேண்டும்.
- அக்குள்களை சுத்தமாகவும், உலர்வாகவும், வியர்வை வராமல் தடுக்கவும் வைக்க பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மேலும் குளித்த பிறகு ரோலான் பயன்படுத்துங்கள்.
- நீங்கள் ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்து வெளியே செல்கிறீர்கள் என்றால், சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.