இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலப்பா என்று முணுமுணுக்கிறீர்களா!இதை செய்து பாருங்க! 1 கொசுவும் உங்கள நெருங்காது!

First Published Mar 25, 2023, 11:06 PM IST

கொசுக்களை விரட்ட வீட்டில் என்னென்ன பொருட்களை பயன்படுத்தலாம்?எப்படி பயன்படுத்துவது போன்ற தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

வீட்டில் அலுவலகத்தில் என்று எல்லா இடங்களிலும் இந்த கொசுக்களின் தொல்லையால் நாம் எரிச்சலடைவோம். தவிர இது பல் வித ஆபாயகரமான நோய் களையும் பரப்பும் தன்மை கொண்டது ஆகையால் இந்த கொசு விஷயத்தில் நாம் அலட்சியம் காட்டாமல் ஜாக்கிரதையாக இருப்பது மிகவும் நல்லது.

இதனை விரட்ட ரசாயனங்கள் கலந்த லிக்விடுகளை வாங்கி உபயோகிப்பதால் வீட்டில் உள்ள சிறு குழந்தைகள் மற்றும் வயதானவரக்ளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதனை தவிர்த்து இயற்கையாகவே சில பொருட்களை வைத்து அதனை விரட்ட செய்யலாம். கொசுக்களை விரட்ட வீட்டில் என்னென்ன பொருட்களை பயன்படுத்தலாம்? எப்படி பயன்படுத்துவது போன்ற தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

கொசுவை விரட்ட இயற்கையான முறைகள்:

கற்பூரம்:

தேவையான பொருள்கள்:

கற்பூரம் - 5 வில்லைகள்
வேப்பெண்ணெய் - 1/2 கப்

எப்படி பயன்படுத்துவது:

உங்களிடம் இருக்கும் எம்ட்டி கொசு விரட்டி லிக்விட் ரீஃபில்லர் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கிண்ணத்தில் வேப்ப எண்ணெய் ஊற்றி அதில் கற்பூத்தை உடைத்துத் பொடியாக்கி சேர்த்து நன்றாக கலந்து விட்டு அதனை ரீஃபில் பாட்டிலில் ஊற்ற வேண்டும். பின் எப்போதும் போன்றுஅதனை வீடுகளில் பயன்படுத்தலாம். இதில் ரசாயனம் எதுவும் சேராததால் சுவாசப் பிரச்சனை போன்ற எதுவும் ஏற்படாது.

பூண்டு​:

தேவையான பொருள்கள்:

பூண்டு பற்கள் - 8
தண்ணீர் - 1 கப்

எப்படி பயன்படுத்துவது:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் பூண்டை அப்படியே தோலுடன் தட்டி சேர்த்து விட வேண்டும். பின் அடுப்பினை ஆஃப் செய்து விட்டு இறக்கி விட்டு ஆற வைக்க வேண்டும். இதனை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொண்டு தெளித்து விடலாம். இப்படி செய்கையில் ஒரு கொசுக் கூட தப்பவே தப்பாது.

உடம்பிலுள்ள கொழுப்பை கரைத்து உடம்பை சிக்கென வைக்க சித்தர்கள் பின்பற்றிய வீட்டு மருத்துவம்!

டீ ட்ரீ ஆயில்:

தேவையான பொருள்கள்:

டீ ட்ரீ ஆயில் - 1/4 கப்
தண்ணீர் -1/4 கப்

எப்படி பயன்படுத்துவது:

தண்ணீரையும் டீ ட்ரீ ஆயிலையும் சமஅளவில் எடுத்துக் கொண்டு அதனை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி ஜன்னல் மற்றும் கதவுகளில் தெளித்து விட வேண்டும்

லெமன் கிராஸ் ஆயில்:

தேவையான பொருள்கள்:

லெமன் கிராஸ் ஆயில் - 1/4 கப்
சூடான நீர் - 1/2 கப்

எப்படி பயன்படுத்துவது:

ஒரு சின்ன பௌலில் சூடான தண்ணீருடன் லெமன் கிராஸ் ஆயிலைச் ஊற்றி நன்றாக மிக்ஸ் சையது விட்டு ஆறிய பிறகு ,அதனை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வீட்டு வாசலில் இருந்து கதவு மற்றும் ஜன்னல் போன்ற இடங்களில் தெளித்து விட்டால் ஒரு கொசுவும் நம்மை நெருங்காது!

click me!