
சமையலறை தான் வீட்டின் மிக முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது. வீட்டின் மற்றும் பகுதிகளை நாம் எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அதைவிட சற்று அதிகமாக சமையலறையை சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம். சமையலறையை எவ்வளவுதான் நவீன கட்டமைப்பில் அழகு படுத்தினாலும் பூச்சிகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சமையலறையை எவ்வளவுதான் சுத்தமாக வைத்தாலும், பூச்சிகள் ஆங்காங்கே ஒளிந்திருக்கிறது என்றும், அதை விரட்டுவதற்கு பல யுத்திகளை பின்பற்றினாலும் அவைகள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்கிறது என்று பல இளத்தரசிகள் புலம்புகிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இந்த செய்தி குறிப்பு உங்களுக்கானது தான்.
பொதுவாக கிச்சனில் இருக்கும் பூச்சிகளை விரட்டுவதற்கு கடைகளில் பல ரசாயனம் கலந்த பொருட்கள் விற்பனையாகின்றன. ஆனால் அவற்றை பயன்படுத்தும் போது அது பூச்சிகளுக்கு மட்டுமின்றி நமக்கும் கேடு விளைவிக்கும். இதனால் பணம் வீணானது தான் மிச்சம். எனவே இயற்கை முறையில் சமையலறையில் இருக்கும் பூச்சிகளை அழிப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: சமையலறைல இருக்க பிளாஸ்டிக் டப்பா மீது படியும் கறை.. இந்த '1' பொருள் இருந்தா உடனடி சுத்தம்!!
பூண்டு:
பூண்டில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனால் தான் பூண்டு சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பூண்டு சமையலுக்கு மட்டுமின்றி கிச்சனில் இருக்கும் பூச்சிகளை விரட்டவும் உதவுகிறது தெரியுமா? ஆம் பூண்டிலிருந்து கடுமையான வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காது. எனவே உங்கள் வீட்டில் இருக்கும் கிச்சன் பூச்சிகளை விரட்ட சில பூண்டு பற்களை தோலுரித்து அது சமையலறையில் ஆங்காங்கே வைத்தால் அதிலிருந்து வரும் வாசனை தாங்க முடியாமல் பூச்சிகள் ஓடிவிடும். நீங்கள் வைத்த பூண்டு காய்ந்து விட்டால் வேறு புதிய பூண்டு பற்கள் மாற்ற வேண்டும். இது தவிர, பூண்டை நன்றாக அரைத்து, அதனுடன் தண்ணீர் சேர்த்து அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அந்த தண்ணீரை கிச்சனில் தெளித்தால் சமையலறை பூச்சிகள் இல்லாமல் சுத்தமாக இருக்கும்.
இதையும் படிங்க: கோதுமை மாவில் சீக்கிரமே வண்டு வராமல் தடுக்கும் '5' சூப்பர் டிப்ஸ்
நீலகிரி தைலம்:
மிகுந்த நறுமணம் கொண்ட இந்த தைலமானது கிச்சனில் இருக்கும் பூச்சிகளை விரட்டுவதற்கு இது உதவியாக இருக்கும். இதற்கு இதன் சில துளிகளை தண்ணீருடன் கலக்கி அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதை கிச்சன் முழுவதும் தெளித்தால் கிச்சனில் இருக்கும் சின்ன சின்ன பூச்சிகள், சிலந்திகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் செத்து மடியும்.
கற்பூரம்:
கிச்சனில் இருக்கும் பூச்சிகளை எளிதாக விரட்ட கற்பூரத்தை பயன்படுத்தலாம். இதற்கு கற்பூரத்தை பொடியாக்கி அந்த பொடியில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் லாவண்டர் எண்ணெய் கலந்து அதை கிச்சனில் அலமாரியில் அல்லது பூச்சிகள் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். அதிலிருந்து வரும் கடுமையான வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காது. எனவே அவைகள் கிச்சனிலிருந்து ஓடிவிடும்.
கிராம்பு:
கிராம்பு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமில்லாமல் உங்கள் சமையலறையில் இருக்கும் பூச்சிகளை விரட்டவும் பெரிதும் உதவுகிறது. ஏனெனில் கிராமில் இருக்கும் கடுமையான வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காது. எனவே கிச்சனில் இருக்கும் பூச்சிகள் விரட்ட கிராம்பை பொடியாக்கி அதை தண்ணீருடன் கலந்து அந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, கிச்சன் முழுவதும் தெளித்தால் கிச்சன் பூச்சிகள் ஓடிவிடும்.
மண்ணெண்ணெய்:
சமையலறையில் இருக்கும் பூச்சிகளை விரட்ட இதை பயன்படுத்தலாம். இதனுடன் நீங்கள் வேறு எதையும் கலக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதை நீங்கள் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கிச்சனில் பூச்சிகள் இருக்கும் இடத்தில் தெளித்தால், அதிலிருந்து வரும் வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காது என்பதால் அவை கிச்சனிலிருந்து ஓடிவிடும். வேண்டுமானால், பருத்தி உருண்டையை மண்ணெண்ணெயில் நனைத்து அதை கிச்சனில் சில இடங்களில் வைத்தால் பூச்சிகள் வரவே வராது.