மழைக்காலத்தில் சமையலறையை மொய்க்கும் கொசுக்கள், ஈக்கள்... வராமல் தடுக்க சூப்பர் டிப்ஸ்!!

First Published | Nov 30, 2024, 9:47 AM IST

Kitchen Cleaning Tips : மழைக்காலத்தில் சமையலறையில் கொசுக்கள் மற்றும் ஈக்கள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

How To Get Rid Of Flies And Insects In Your Kitchen In Tamil

Monsoon Tips : மழைக்காலம் தொடங்கிவிட்டது. தற்போது ஆங்காங்கே மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. இந்த பருவத்தில் வீட்டின் சமையலறையில் கொசுக்கள், ஈக்கள் மற்றும் பூச்சிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். இதனால் சமையலறையில் துர்நாற்றம் பரவுவது மட்டுமின்றி, தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 

இவற்றை சமையலறையில் இருந்து விரட்டுவதற்கு நீங்கள் ரசாயன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை முறையில் விரட்டுவது எப்படி என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

How To Get Rid Of Flies And Insects In Your Kitchen In Tamil

Monsoon Kitchen Tips : இவற்றை சமையலறையில் வைக்கவும்!

உங்கள் வீட்டின் சமையலறையில் கொசுக்கள், ஈக்கள் தொல்லை அதிகமாக இருந்தால் சமையலறையில் இருக்கும் ஜன்னலுக்கு அருகில் புதினா இலை, துளசி இலை மற்றும் எலும்பிச்சை பழம் ஆகியவற்றை வைக்க வேண்டும். 
அதுபோலவே, லாவண்டர் எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவற்றை ஜன்னலுக்கு அருகே வைத்தால் அந்த வாசனைக்கு சமையலறையில் கொசுக்கள் ஈக்கள் வரவே வராது ஓடிவிடும்.

இதையும் படிங்க:  மழைக்காலத்தில் பல்புகளை சுற்றி வரும் பூச்சிகளை 1 நொடியில் விரட்ட டிப்ஸ்!!

Tap to resize

How To Get Rid Of Flies And Insects In Your Kitchen In Tamil

Kitchen Cleaning Tips : சமையலறையை சுத்தமாக வைக்கவும்:

மழைக்காலத்தில் சமையலறை எப்பவும் சுத்தமாக வையுங்கள். குறிப்பாக சமையலறையில் இருக்கும் சிங்கில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுபோல காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டிய பிறகு அவற்றின் தோலை அப்படியே வைக்காமல், அதை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு மூடி இருக்கும் குப்பை தொட்டியில் போடுங்கள்.

இதையும் படிங்க:  கிச்சன் சிங்கில் இந்த '1' பொருள் வைங்க.. அடைப்பு தடுக்க சூப்பர் டிப்ஸ்!!

How To Get Rid Of Flies And Insects In Your Kitchen In Tamil

Kitchen Tips : கிச்சன் பைப் தண்ணீர் ஒழுகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:

உங்கள் வீட்டு கிச்சன் பைப் தண்ணீர் ஒழுகினால் அதை உடனே சரி செய்து விடுங்கள். அதுபோல கிச்சன் சிங்கையும் அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.

How To Get Rid Of Flies And Insects In Your Kitchen In Tamil

Kitchen Hacks : பழங்களை மூடி வைக்கவும்:

நீங்கள் பழங்களை வெட்டி வைத்தால் அவற்றை உடனே ஏதாவது ஒரு தட்டை கொண்டு மூடி வையுங்கள். ஏனெனில் அவற்றின் மீது கொசுக்கள், ஈக்கள் தங்கும். அதுபோல சமைத்த உணவுகளின் பாத்திரங்களையும் திறந்து வைக்காமல் மூடி வையுங்கள்.

How To Get Rid Of Flies And Insects In Your Kitchen In Tamil

Kitchen Tips In Monsoon : சிங்கில் பாத்திரங்களை சேர்க்காதே!

வீட்டின் கிச்சன் சிங்கிள் பாத்திரம் சேர்க்கும் பழக்கம் இருந்தால் உடனே நிறுத்துங்கள். பாத்திரம் சிங்கில் ரொம்ப நேரம் இருந்தால், அதன் காரணமாக சிங்கில் அழுக்குகள் படியும். எனவே அவ்வப்போது பாத்திரங்களை கழுவி விடுங்கள்.

Latest Videos

click me!