பூண்டு சாப்பிடுவதால் உடலில் இரத்த ஓட்டம் சீராகும். மேலும் உடல் வெப்பநிலை சீராக இருக்கும். குறிப்பாக பூண்டு பற்களை சாப்பிடுவது உடலில் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கும். சரி இப்போது குளிர்காலத்தில் தினமும் காலையில் இரண்டு பல் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
குளிர்காலத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைகிறது தெரியுமா? இதனால், இருமல், சளி, காய்ச்சல், தொற்று உள்ளிட்ட நோய்கள் அடிக்கடி ஏற்படுகிறது. ஆனால் இந்த சீசனில் பூண்டை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூண்டில் உள்ள அல்லிசின் என்ற செயலில் உள்ள கலவை இதற்கு உதவுகிறது.