பெற்றோர் - குழந்தை உறவில் விரிசல் வர இந்த '1' மோசமான பழக்கம் தான் காரணம்

First Published | Nov 29, 2024, 3:42 PM IST

Parenting Mistakes : பெற்றோரின் மொபைல் போன் பழக்கத்தால் குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே இடைவெளி ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

Parenting Mistakes In Tamil

குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் சவாலான காரியம். ஒவ்வொருவரும் தங்களது வசதிக்கேற்ப குழந்தைகளுக்கு பரிசுகளை வாங்கி கொடுப்பார்கள் ஆனால் எந்த ஒரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு கொடுக்கக் கூடிய ஒரு சிறந்த பரிசு எதுவென்றால் அவரது நேரம் தான். இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் சம்பாதிப்பதால் தங்களால் இயன்ற அளவுக்கு குழந்தைகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறார்கள். ஆனால் பணத்தை சம்பாதிக்க வேண்டுமென்று நோக்கத்தில் ஓடிக்கொண்டிருப்பதால் அவர்கள் பெரும்பாலும் தங்களது குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் போகிறது.

Parenting Mistakes In Tamil

இத்தகைய சூழ்நிலையில், பெற்றோரிடம் இருக்கும் சில பழக்கவழக்கங்கள் பெற்றோருக்கும் குழந்தைக்கு இடையே தூரத்தை ஏற்படுகிறது. அதுதான் மொபைல் போன் பயன்படுத்துவது. மொபைல் போன் எப்படி பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே தூரத்தை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  குழந்தை வளர்ப்பில் அம்மாக்கள் இந்த தவறுகளை செய்தால் 'இன்றே' திருத்திக்கோங்க!!

Tap to resize

Parenting Mistakes In Tamil

மொபைல் போன் எப்படி உறவை தூரப் படுத்துகிறது?

சில பல வேலை காரணமாக நீங்கள் மொபைல் போனில் பிஸியாக இருக்கும் சமயத்தில் உங்களது குழந்தை உங்களது கவனத்தை ஈர்த்து ஈர்க்க முயற்சிக்கும் போது நீங்கள் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் மீண்டும் உங்கள் அருகில் உங்கள் குழந்தை வர தயங்கும். மேலும் அவர்கள் ஏதாவது செய்திருந்தாலோ அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இதுவே உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே உள்ள தூரத்தை அதிகரிக்கச் செய்யும்.

இதையும் படிங்க: 

Parenting Mistakes In Tamil

குழந்தையை மொபைல் போனுக்கு பழக்கப்படுத்துதல்:

மொபைல் போன் பயன்பாட்டில் பெற்றோர் செய்யும் இரண்டாவது தவறு எதுவென்றால், தங்களது வேலையை எளிதாக இன்றைய காலத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு சிறு வயதிலிருந்து மொபைல் போனை பழக்கப்படுத்துகிறார்கள். ஆனால் இது அவர்களுக்கு தீவிரமான பிரச்சனையை உருவாக்கும். பிள்ளைகள் வளர வளர மொபைல் வீடியோ கேம் மற்றும் சமூக ஊடகங்கள் போன்றவற்றிற்கு அடிமையாகி விடுவார்கள்.

எனவே இதை தவிர்க்க நீங்கள் வேலையில் பிஸியாக இருந்தால் கூட குழந்தைகள் மொபைல் பார்ப்பதற்கு ஒரு வரம்புகளை அமைக்கவும். மேலும் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் எதிர்கால பிரச்சினையாகிவிடும். இது தவிர குழந்தைகள் மொபைல் போனை பழக்கப்படுத்தினால் அவர்கள் பல வகையான மனம் மற்றும் உடல்களுக்கு ஆளாக நேரிடுவார்கள் மற்றும் உங்களை விட்டு தூரமாகி விடுவார்கள்.

Parenting Mistakes In Tamil

இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

இன்றைய வாழ்க்கையில் மொபைல் இல்லாமல் இருப்பது கடினம். ஏன் நாம் அதை விரும்பவிட்டாலும் கூட மொபைலை பயன்படுத்துகிறோம். ஏனெனில் சில சமயங்களில் அதன் மூலம் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இது போன்ற பல விஷயங்களுக்காக மொபைல் போனை பயன்படுத்துகிறோம். ஆனால், சில விஷயங்களை செய்வதன் மூலம் மொபைல் போனில் எதிர்மறை தாக்கத்தை குறைத்து விடலாம். அவை.

- நாள் முழுவதும் குழந்தைகளுடன் சுமார் ஒரு மணி நேரம் செலவிடுங்கள். மேலும் அவர்களுடன் பேசி, அந்நாளின்
அனுபவத்தை அவர்களிடம் கேளுங்கள்.

- குழந்தைகளுடன் சில ஆக்கபூர்வமான வேலையில் ஈடுபடுங்கள் முடிந்தால் அவர்களை வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

- சாப்பிடும் சமயத்தில் மொபைல் போன் பயன்படுத்துவதை தவிப்பது நல்லது.

- குழந்தை உங்களை பின்பற்றி வளர்வதால் அவர்கள் முன் ஒருபோதும் மொபைல் போன் பயன்படுத்த வேண்டாம்

Latest Videos

click me!