Cockroaches Control tips : கரப்பான் பூச்சிகள் எந்த பருவநிலை என்று பாராமல் வீட்டிற்கு வந்து நம்மை தொந்தரவு செய்யும். அதுவும் குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் வீட்டில் கரப்பான் பூச்சியின் தொல்லை அதிகமாகவே இருக்கும். மேலும் இது கிச்சனில் தான் அதிகமாக இருக்கும். வீட்டில் இருந்து கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கு பல முயற்சிகளை செய்தும் பலன் இல்லையா? என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் உங்களுக்கான பதிவு தான் இது.
24
Orange Peel And Cockroaches In Tamil
Cockroaches Control Home Remedy : பொதுவாக கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கு கடைகளில் இரசாயன கலந்த பொருட்கள் பல விற்பனை செய்கின்றனர். அவற்றை வாங்கி பயன்படுத்தும் போது அது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் மோசமான தீங்கு விளைவிக்கும் தெரியுமா? இத்தகைய சூழ்நிலையில் எந்த வித ரசாயன பொருட்களுமின்றி கரப்பான் பூச்சியை வீட்டில் இருந்து சுலபமாக விரட்ட ஆரஞ்சு பழ தோல் போதும்.
ஆம், ஆரஞ்சு பழ தோலை வைத்து வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சிகளை சுலபமாக விரட்டி விடலாம். அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Orange Peel Control Cockroaches : ஆரஞ்சு பழ தோலை வைத்து கரப்பான் பூச்சிகளை விரட்டுவது எப்படி?
ஆரஞ்சு பழத் தோலில் இருக்கும் லிமோமின் என்ற பண்பு கரப்பான் பூச்சிகளை விரட்டி அடிக்கும். இதற்கு ஆரஞ்சு பழத் தோலை வெயிலில் நன்கு காய வைத்து அதை கரப்பான் பூச்சிகள் தங்கும் இடத்தில் வைக்கவும். அதிலிருந்து வரும் வாசனை கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காது என்பதால், கரப்பான் பூச்சிகள் வீட்டிலிருந்து ஓடிவிடும். அதுபோல கரப்பான் பூச்சிகள் வரும் இடத்திலும் ஆரஞ்சு பழத் தோலை வைத்தால் கரப்பான்பூச்சிகள் வீட்டிற்குள் வரவே வராது ஓடிவிடும்.
Orange Peel Benefits : ஆரஞ்சு பழ தோல் பிற பயன்பாடுகள்:
- வீட்டில் இருக்கும் எக்கு பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு ஆரஞ்சு பழ தோலை பயன்படுத்தினால் பாத்திரத்தில் இருக்கும் கிரீஸ் முற்றிலும் நீங்கி பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.
- மைக்ரோவேவனை சுத்தம் செய்வதற்கு ஆரஞ்சு பழ தோல் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு பழ தோல் போட்டு சிறிது நேரம் கழித்து அதை மைக்ரோவோவனில் வைத்து சூடாக்கவும். இப்படி சூடாக்கும் போது அதன் நீராவி மைக்ரோவோவனிலிருந்து வரும் நாற்றத்தை சுலபமாக அகற்றி விடும்.