முழுபலன்களை பெற வெண்டைக்காய் கூட இந்த '5' உணவுகளை சாப்பிடக் கூடாது!!

First Published | Nov 29, 2024, 11:18 AM IST

Bad Food Combinations For Lady Finger : வெண்டைக்காய் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சில உணவுகளுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் அது நன்மைக்கு பதிலாக ஆரோக்கியத்திற்கு தீங்கு தான் விளைவிக்கும். எனவே வெண்டைக்காய் சாப்பிடும் போது எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

Foods You Should Avoid Eating with Ladyfinger In Tamil

Lady Finger : நாம் ஆரோக்கியமாக இருக்க பச்சை காய்கறிகள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஆயுர்வேதத்தில் நாம் உண்ணும் உணவு முதல் குடிக்கும் பானங்கள் வரை என அனைத்திற்கும் சில விதிகள் உள்ளன. அதாவது சில காய்கறிகளை சில உணவுகளுடன் சாப்பிட கூடாது இல்லையெனில் உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படலாம். அவற்றில் ஒன்றுதான் வெண்டைக்காய்.

Foods You Should Avoid Eating with Ladyfinger In Tamil

Lady Finger Nutrition : வெண்டைக்காய் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது இதில் வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் பி, மெக்னீசியம், ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன அவை நம் உடலுக்கு தேவையான நன்மைகளை வாரி வழங்குகின்றது. 

வெண்டைக்காய் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சில உணவுகளுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் அது நன்மைக்கு பதிலாக ஆரோக்கியத்திற்கு தீங்கு தான் விளைவிக்கும் தெரியுமா? எனவே வெண்டைக்காய் சாப்பிடும் போது எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

Tap to resize

Foods You Should Avoid Eating with Ladyfinger In Tamil

Lady Finger And Milk : வெண்டைக்காய் சாப்பிடும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்:

பால் :

வெண்டைக்காய் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெண்டைக்காய் மற்றும் பால் இவை இரண்டிலும் கால்சியம் உள்ளது. மேலும் வெண்டைக்காயில் ஆக்சலேட்டும் உள்ளது. எனவே, கால்சியம் மற்றும் ஆக்சலேட் இணைந்து ஆக்சலைட்டை உருவாக்குகிறது. இது சிறுநீரக கற்கள் வருவதற்கு வழி வகுக்கும் எனவே எக்காரணம் கொண்டு வெண்டைக்காய் சாப்பிட்ட பிறகு பால் குடிக்க வேண்டாம்.

Foods You Should Avoid Eating with Ladyfinger In Tamil

Lady Finger And Bitter Gourd : பாகற்காய்:

வெண்டைக்காயுடன் பாகற்காய் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவை இரண்டும் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். ஒருவேளை உங்களுக்கு ஏற்கனவே செரிமான பிரச்சனை இருந்தால் வெண்டைக்காய் மற்றும் பாகற்காயை ஒன்றாக சேர்த்து சாப்பிட வேண்டாம். ஏனெனில் வெண்டைக்காய் குளிர்ச்சியாகவும், பாகற்காய் சூடான தன்மையும் கொண்டது. இவை இரண்டும் சேர்ந்து வயிற்றில் பிஹெச் சமநிலையை சீர்குளித்து விடும். இதனால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.

Foods You Should Avoid Eating with Ladyfinger In Tamil

Lady Finger And Radish : முள்ளங்கி

வெண்டைக்காய் சாப்பிடும்போது முள்ளங்கி சாப்பிடக்கூடாது. மேலும் உங்களுக்கு ஏற்கனவே வயிற்றில் வாயு பிரச்சனை இருந்தால் வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி சேர்த்து சாப்பிட வேண்டாம். இல்லையெனில் வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படும். மேலும் முள்ளங்கியில் சல்பர் உள்ளது இது வாயு பிரச்சனையே மேலும் அதிகரிக்க செய்யும். எனவே வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கியை சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

Foods You Should Avoid Eating with Ladyfinger In Tamil

Lady Finger And Red Meat : சிவப்பு இறைச்சி:

வெண்டைக்காய் மற்றும் சிவப்பு இறைச்சி ஒருபோதும் சேர்த்து சாப்பிட கூடாது. ஏனெனில் இவை இரண்டும் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதனால் செரிமான பிரச்சனை மட்டுமின்றி, பல உடல்நல பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும்.

இதையும் படிங்க:  வெண்டைக்காய் நல்லதுதான்; ஆனா இவங்களுக்கு மட்டும் எதிரி!!

Foods You Should Avoid Eating with Ladyfinger In Tamil

Lady Finger And Tea : டீ:

நீங்கள் காலை அல்லது மதிய உணவிற்கு பிறகு டீ குடிக்க விரும்பினால், வெண்டைக்காய் சாப்பிட்டு இருந்தால் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவது தடுக்கப்படும்.

இதையும் படிங்க: வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வச்சி குடிச்சா இத்தனை நன்மைகளா?!

Latest Videos

click me!