இன்றைய நவீன காலத்தில் பெரும்பாலோனோருக்கு கண்களில் கருவளையங்கள் உண்டாவது மிகவும் பொதுவானதாகிவிட்டது. இதற்குக் காரணம், நாள் முழுவதும் கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்வதாகும். அதுமட்டுமின்று, தூக்கமின்மை, மேக்கப் போடுவது, தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்துவது போன்ற பழக்கவழக்கங்களால் கருவளையம் ஏற்படும் அபாயம் அதிகமாகிறது. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. எனவே, கருவளையங்களை முற்றிலும் அகற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், கருவளையங்களைப் போக்கக்கூடிய சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு சாற்றை தொடர்ந்து கருவளையங்களில் தடவினால், அவை படிப்படியாக குறையும். ஏனெனில், உருளைக்கிழங்கில் வைட்டமின்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. உருளைக்கிழங்கை அரைத்துக் சாறு எடுத்து கொள்ளவும்.அதனை, கண்களின் கீழ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும்.
35
Tips to get rid of dark circles:
உணவில் மாற்றம்:
தினசரி உணவில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்த, கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், சூப் இவற்றைச் சேர்த்துக் கொண்டால் உடலில் கலந்து உடலுக்கு நல்ல பலனளிக்கும்.
எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு காட்டனின் உதவியுடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.
45
Tips to get rid of dark circles:
கிரீன் டீ:
க்ரீன் டீ பேக்கைப் பயன்படுத்துவதால், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் குறையத் தொடங்குகிறது. இதனை 10 நிமிடம் தடவிய பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும். இது இரத்த நாளங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் கருவளையங்கள் குறைகின்றன.
55
Tips to get rid of dark circles:
குளிர்ந்த பால்:
குளிர்ந்த பாலை காட்டன் கொண்டு கண்களுக்குக் கீழே தடவ வேண்டும். இதனை 10 நிமிடம் தடவிய பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் கண்களின் கருவளையம் குறையும். பால் சருமத்திற்கும், கருவளையங்களைக் குறைக்கவும் பயன்படுகிறது.