செய்முறை விளக்கம்:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
மேலும் படிக்க....Married: ஆடி மாதத்தில் ஏன் புதுமண தம்பதிகள் ஒன்று சேர கூடாது.! இதுக்கு பின்னால் இவ்வளவு பெரிய ரகசியம் இருக்கா?
அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து 10 நிமிடம் வதக்கி கொள்ளவும். பின்னர் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 முதல் 7 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
பீர்க்கங்காய் வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து கலக்கவும். இரண்டு கலவையும் சூடு ஆற வைத்த பின்னர் மிக்சியில் தேவையான தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளளவும். அதனுடன் கடுகு கருவேப்பிலை தாளித்து விட்டால் பத்தே நிமிடத்தில் சுவையான பீர்க்கங்காய் துவையல் தயார். இதனை சூடான சாதத்துடன் கலந்து சூடான சாதம் அல்லது தோசை, இட்லியுடன் பரிமாறலாம்.