Budhan Peyarchi 2022: இன்று புதன் ராசி மாற்றம்...இந்த மூன்று ராசிகளுக்கு கஜகேசரி யோகம் ஆரம்பம்...

First Published | Jul 17, 2022, 10:57 AM IST

Budhan Peyarchi 2022 Palangal: புத்தி மற்றும் பேச்சின் கடவுளான புதன் கிரகம் இன்று அதாவது ஜூலை 17ஆம் தேதி தனது ராசியை மாற்றுகிறது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு வாழ்வில் புது ஒளி பிறக்கப்போகிறது. 

Budhan Peyarchi 2022

இன்று புதன் பெயர்ச்சி 2022:

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு மாதமும் சில கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அப்படியாக, புத்தி, பேச்சு, செல்வம், பெருமை, திருமண வாழ்க்கையின் காரணியான புதன் கிரகம்  ஜூலை 17ஆம் தேதி அதாவது இன்று கடக ராசிக்குள் நுழைய உள்ளது. புதனின் இந்த ராசி மாற்றம் அனைத்து 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும், இருப்பினும் குறிப்பாக இந்த 3 ராசிகளில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படும். இந்த நேரம் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 மேலும் படிக்க...ஆடியின் முதல் வாரத்தின் ராசி பலன்.. 18 ஜூலை முதல் 24 ஜூலை 2022 வரை....இந்த ராசிகளுக்கு தொழிலில் லாபம் பெருகும்

Budhan Peyarchi 2022

மிதுனம்:

புதனின் பெயர்ச்சி மிதுனம் ராசியில் கோச்சார இடத்தில் இரண்டாம் ஸ்தானத்தில் நடக்கவுள்ளது. இது செல்வம் மற்றும் பேச்சு ஆற்றலுக்கான இடமாகக் கருதப்படுகிறது. மிதுன ராசிக்கு நான்காம் வீட்டிற்கு அதிபதியான புதன் இருப்பதால் இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் ஏற்படலாம். மேலும், தாயின் உதவியால் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த காலகட்டத்தில் வணிகத்தில் பெரிய ஒப்பந்தங்கள் சாத்தியமாகும். இதனால் நல்ல லாபம் கிடைக்கும். 

 மேலும் படிக்க...ஆடியின் முதல் வாரத்தின் ராசி பலன்.. 18 ஜூலை முதல் 24 ஜூலை 2022 வரை....இந்த ராசிகளுக்கு தொழிலில் லாபம் பெருகும்

Tap to resize

Budhan Peyarchi 2022

கன்னி:

புதன் சஞ்சாரம் கன்னி ராசியின் ஜாதகத்தில் இருந்து 11 ஆம் இடத்தில் நடக்கிறது.ஜோதிடத்தில் இது ஒரு முக்கிய வீடாக கருதப்படுகிறது. இது வருமானம் மற்றும் லாபம் தரும் இடமாக கருதப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த ராசியின் அதிபதியும் புதன் கிரகம் என்பதால் இக்காலம் திடீர் பண பலன்களை தரும். தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். வாழ்வில் வெற்றி உண்டாகும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். தொட்டது துலங்கும். 
 

Budhan Peyarchi 2022


துலாம்:

துலாம் ராசியில் பத்தாம் வீட்டில் புதன் பெயர்ச்சியாக உள்ளார். இது தொழில் மற்றும் வேலைக்கான ஸ்தானமாக கருதப்படுகின்றது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரம் விரிவடையும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் இந்த காலகட்டத்தில் ஒரு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடும். புதன் சஞ்சாரம் உங்களின் பணி செய்யும் பாணியை மேம்படுத்தும். இதன் காரணமாக, துலா ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பாராட்டுதல்களை பெறலாம். 

 மேலும் படிக்க...ஆடியின் முதல் வாரத்தின் ராசி பலன்.. 18 ஜூலை முதல் 24 ஜூலை 2022 வரை....இந்த ராசிகளுக்கு தொழிலில் லாபம் பெருகும்

Latest Videos

click me!