தென்னிந்தியாவின் பிரபலமான உணவு அரிசி. அரிசி இல்லாமல் அந்த நாளை உணவு முழுமையடையாது. பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது அரிசி உணவு தான் சொல்லப் போனால் அரிசி மற்றும் பருப்பு வகைகள் இல்லாமல் வேறு எந்த உணவும் திருப்தி தராது என்று நம்பிக்கை மக்களிடையே உள்ளது..
25
Bug infestation in rice in tamil
இத்தகைய சூழ்நிலையில், பலர் வீட்டில் 4-5 மாதங்களுக்கு தேவையான அரிசியை வாங்கி வைத்து விடுவார்கள். இதனால் அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வந்துவிடும். அதுவும் குறிப்பாக மூட்டைகளில் சேமிக்கப்படும் அரிசியில் வண்டுகள் அதிகமாகவே இருக்கும். இதனால் இல்லத்தரசிகளுக்கு அரிசியை சுத்தம் செய்வது மிகவும் சிரமமாக உணர்வார்கள். எனவே அரிசியில் இருக்கும் வண்டு, பூச்சிகளை சின்ன சின்ன குறிப்புகள் மூலம் விரட்டி எடுப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அரிசியில் இருக்கும் வண்டு, பூச்சிகளை விரட்டுவது எப்படி?
கிராம்பு:
அரிசியில் இருக்கும் வண்டு பூச்சிகளை அகற்ற 8-9 கிராம்புகளை அரிசியில் போட்டு வைக்க வேண்டும். கிராம்பில் இருக்கும் வலுவான வாசனை அரிசியில் இருக்கும் பூச்சிகளை விரட்ட உதவுகிறது. எனவே இந்த முறையை பின்பற்றினால் அரிசியில் இருக்கும் வண்டு, பூச்சிகளை எளிதாக விரட்டி அடிக்கலாம்.
வேப்ப இலை:
அரிசியில் உள்ள பூச்சிகளை அகற்ற வேப்ப இலை சிறந்த தேர்வாகும். இதற்கு வேப்ப இலையை பொடியாக நன்றாக அரைத்து அதை ஒரு துணியில் கட்டி, அந்த துணியை அரிசி வைத்திருக்கும் பெட்டிக்குள் வைக்க வேண்டும். வேப்ப இலையில் இருக்கும் இயற்கையான பண்புகள் வண்டுகளை அரிசியிலிருந்து விரட்டி விடும்.
45
Bug-free rice in tamil
தீப்பெட்டி:
அரிசி இருக்கும் பெட்டியில் தீப்பெட்டியை வைத்தால் பூச்சிகள் வண்டுகள் வராது. ஏனெனில் தீப்பெட்டியில் இருக்கும் கந்தகம் வண்டு பூச்சிகள் வருவதை தடுக்க உதவுகிறது. ஆனால் நீங்கள் அரிசியை பயன்படுத்துவதற்கு முன் அதை சூடான நீரில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பூண்டு:
இதற்கு சிறிதளவு பூண்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் தோலை உரித்து அதை அரிசியில் போடவும். பூண்டில் இருக்கும் கடுமையான வாசனை அரிசியில் இருக்கும் வண்டுகள் பூச்சிகளை விரட்டி அடிக்கும்.
அரிசியில் வண்டுகள், பூச்சிகள், புழுக்கள் வருவதை தடுக்க பிரியாணி இலையில் பயன்படுத்தலாம். இதற்கு அரிசியை காற்று புகாத டப்பாவில் சேமித்து அதில் சில பிரியாணி இலைகளை போட்டு வைக்க வேண்டும்.
வத்தல்:
அரிசியில் சிறிதளவு வத்தலை போட்டு வைத்தால் மிளகாயிலிருந்து வரும் வாசனை அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுக்கும்