
பொதுவாகவே நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகாலையில் எழுந்து படி.. அப்போதான் படிப்பு மண்டையில் ஏறும்.. என்று அடிக்கடி சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். மேலும் பல பெற்றோர்கள் தங்களது குழந்தை இரவில் படிப்பதை புறக்கணிக்கிறார்கள். ஆனால் உண்மையில், இரவில் படிப்பது பல மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சொல்லப்போனால் பகலில் விட இரவு படிப்பது பல நன்மைகளை வழங்கும். எனவே இரவில் குழந்தைகள் படிப்பதால் அதன் பலன்கள் என்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: பெண் குழந்தைகளிடம் பெற்றோர் சொல்லவே கூடாத '5' முக்கிய விஷயங்கள்!!
குழந்தைகள் இரவு நேரத்தில் படிப்பதால் கிடைக்கும் பலன்கள்:
1. அமைதியான சூழல்:
இரவு நேரம் ரொம்பவே அமைதியாக இருக்கும். இந்த நேரத்தில் சத்தம் மற்றும் கவனத்தை சிதறடிக்கும் விஷயங்கள் இல்லாமல் இருக்கும். இதன் காரணமாக படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும். இந்த அமைதியான சூழலில் படிப்பில் முழு கவனம் செலுத்தப்படும் மற்றும் படிக்கும் பாடத்தை எளிதாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்ள முடியும். மேலும் சில ஆய்வுகள் படி இரவு நேரத்தில் படிக்கும் விஷயங்கள் அப்படியே நினைவில் வைக்க உதவுகிறது.
2. ஆக்கபூர்வமான சிந்தனை:
இரவு நேரத்தில் படித்தால் உங்களது படைப்பு சிந்தனை துண்டப்படுகிறது. மேலும் இந்த நேரத்தில் புது யோசனைகள் மற்றும் படிப்பதற்கான புதிய முறைகள் உங்களுக்கு வரலாம்.
3. மனம் சுறுசுறுப்பாக இருக்கும்:
இரவு நேரத்தில் மூளை அதிக சுறுசுறுப்பாக இருக்கும். எனவே இந்த நேரத்தில் படித்தால் படிக்கும் விஷயங்களை விரைவாக புரிந்து கொள்ளவும், நினைவில் வைத்துக் கொள்ளவும் முடியும். சொல்லப்போனால் இந்த நேரத்தில் மனம் ரொம்பவே சுறுசுறுப்பாக இருப்பதால் நன்றாக படிக்க முடியும்.
4. நேரம் சரியாக பயன்படுத்தப்படும்:
இரவு நேரத்தில் படிக்கும் போது யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். மேலும் நீங்கள் உங்களது சொந்த வேகத்தில் மற்றும் சொந்த வழியில் படிக்கலாம். சுய கட்டுப்பாடு மற்றும் நேர நிர்வாகத்திற்கு இந்த நேரத்தில் படிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு ஒரே கதையை 'பல' தடவை சொல்றதால 'இப்படி' ஒரு நன்மை இருக்குனு தெரியுமா?
5. மன அழுத்தத்தை குறைக்கும்:
இரவு நேரத்தில் படித்தால் பகலில் ஏற்பட்ட மன அழுத்தம் குறையும் மற்றும் மனம் மிகவும் நிதானமாகவும் இருக்கும். இது தவிர, இரவு நேரத்தில் படித்த பிறகு நீங்கள் தூங்கினால் உங்களது தூக்கத்தின் தரமும் மேம்படும். அதாவது, படிக்கும் இலக்கை அடைந்து விட்டால் இரவில் நல்ல தூக்கம் கிடைப்பது நிச்சயம். மேலும் உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி நீங்கள் இரவு நேரத்தில் படிக்கும் போது உங்களது நேரம் வேளாண்மை கணிச்சமாக மேம்படுவது மட்டுமின்றி, படித்த லக்கை எளிதாக அடைந்து விடலாம்.
6. குறைவான கவனச்சிதறல்:
பகலில் படிக்கும் போது மொபைல் போன், சமூக ஊடகங்கள், நண்பர்கள், குடும்பத்தினர்கள் போன்ற விஷயங்களை படிப்பு தடைபடும் ஆனால் இரவு நேரத்தில் இந்த பிரச்சனை இருக்காது. முழு கவனத்துடன் படிப்பில் கவனம் செலுத்த முடியும்.