பேக்கிங் சோடா உடலுக்கு கெட்டதா? சமையலுக்கு பயன்படுத்தலாமா?

First Published | Dec 14, 2024, 11:08 AM IST

Cooking With Baking Soda : பேக்கிங் சோடா சமையலில் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் அதை தொடர்ந்து பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா? என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

What is Baking Soda and How Does it Work in Cooking in Tamil

பொதுவாக பேக்கிங் சோடா எல்லாருடைய வீட்டின் சமையலறையில் பயன்படுத்தப்படுகிறது. இது பல நன்மைகளையும் கொண்டுள்ளது. 
 'பேக்கிங் சோடா' தமிழில் சோடா உப்பு என்று அழைக்கப்படுகிறது. சோடியம் பைகார்பனேட் என்னும் உப்பு  இதில் உள்ளது. இது காரத்தன்மையுடையது. சோடா உப்பை நாம் மாவில் பயன்படுத்தும் போது அதிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடு வெளியாகி மாவை மிருதுவாகவும், பஞ்சு போலாகவும் மாற்றுகிறது. 

Can Baking Soda Be Used in Cooking in Tamil

இத்தகைய சூழ்நிலையில், நாம் பேக்கிங் உணவில் தொடர்ந்து பயன்படுத்துவது நல்லதா? இதனால் வயிற்றுப்புண் ஏற்படுமா? பேக்கிங் சோடாவை தொடர்ந்து உணவில் பயன்படுத்தி வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Benefits of Using Baking Soda in Cooking in Tamil

சோடா உப்பு வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துமா?

உண்மையில், பேக்கிங் சோடாவில் இருக்கும் சோடியம் பைகார்பனேட் வயிற்றில் இருக்கும் புண்ணால் ஏற்படும் எரிச்சலை குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் வயிற்றுப்புண் இருக்கும் சமயத்தில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், சிறிதளவு பேக்கிங் சோடாவை தண்ணீர் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். அதுமட்டுமின்றி, அசிடிட்டி பிரச்சனையை சரி செய்ய பேக்கிங் சோடாவில் இருக்கும் சோடியம் பைகார்பனேட் உதவுகிறது. எனவே, அசிடிட்டி அல்சர் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய பேக்கிங் சோடா பெரிதும் உதவுகிறது என்பதுதான் உண்மை.

Uses of Baking Soda in Cooking in Tamil

பேக்கிங் சோடா பயன்பாடுகள் மற்றும் அதன் நன்மைகள்:

- பேக்கிங் சோடா வாய் கொப்பளிக்க பயன்படுத்தப்படுகிறது. வாய் கொப்பளிக்க பயன்படுத்தினால் வாயில் இருக்கும் கிருமிகள் அளிக்கப்படுகிறது மற்றும் பற்கள் வெண்மையாககும். 

- அதுபோல, சோடியம் பை கார்பனேட் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, இது கிட்னி செயலிழப்பு பிரச்சனை சரி செய்யவும், அதிக பொட்டாசியம் பிரச்சனையை குறைக்கவும் இதை பயன்படுத்துகிறார்கள்.

- மேலும் விளையாட்டு வீரர்கள் குடிக்கும் எனர்ஜி ட்ரிங்கிலும் சிறிதளவு சோடியம் பை கார்பனேட் உள்ளது. அது அவர்களது எனர்ஜியை அதிகப்படுத்தும்.

Cooking with baking soda in tamil

பேக்கிங் சோடாவை யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது?

- இருதய பிரச்சனை உள்ளவர்கள், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பேக்கிங் சோடாவை ஒருபோதும் பயன்படுத்தவே கூடாது. ஏனெனில் இது  பிரச்சினையை மேலும் அதிகரிக்கும். மேலும் இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் பேக்கிங் சோடாவை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது அல்லது பேக்கிங் சோடா சேர்த்த உணவை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

குறிப்பு: பேக்கிங் சோடா அதிகம் பயன்படுத்தினால் அதில் இருக்கும் பாஸ்போரிக் ஆசிட் எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டையும் குறைத்து விடும். இது தவிர செரிமான ஆரோக்கியத்தையும் பாதிக்கும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை தடுக்கும். எனவே பேக்கிங் சோடாவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தாமல் மிதமாக பயன்படுத்துவது தான் நல்லது.

Latest Videos

click me!