உடலில் கெட்ட கொழுப்பு சேரவிடாமல் தடுக்க உணவு பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். சரியான தூக்கமின்மை, தவறான உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் உடலில் தேங்கும் கெட்ட கொழுப்புகள் தொப்பையாக காட்சியளிக்கிறது. இதை குறைக்க வாக்கிங் அல்லது ரன்னிங் (ஓடுதல்) இந்த இருபயிற்சிகளில் எதை செய்வது நல்ல பலன் அளிக்கும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
26
Exercise for reducing belly fat in tamil
வாக்கிங் மற்றும் ரன்னிங் இரண்டும் வெவ்வேறு நன்மைகளைக் கொண்டிருந்தாலும் எது தொப்பையை குறைக்க உதவுகிறது என்பது பலருக்கும் தெரியாது. குறிப்பாக வெறும் உடற்பயிற்சிகளில் மட்டுமே தொப்பையை குறைக்க முடியாது. உங்களுடைய உணவு பழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். இங்கு வாக்கிங் மற்றும் ரன்னிங் இரண்டின் தனித்தனியான நன்மைகளையும், எது சிறந்தது என்பதையும் காணலாம்.
நடைபயிற்சி எல்லா தரப்பினரும் செய்யக்கூடிய மிதமான உடற்பயிற்சி ஆகும். உங்களுடைய தினசரி நடவடிக்கைகளில் நடைபயிற்சியை சேர்த்துக் கொள்வது உடல் மற்றும் மனநலனை பாதுகாக்க சிறந்த வழியாகும். தினமும் நடைபயிற்சி செய்வது செரிமானத்தை மேம்படுத்தும். இந்த பயிற்சியை மேற்கொள்ள சிறப்பான எந்த உபகரணங்களும் தேவையில்லை. நல்ல காலணிகள் அல்லது ஷூக்களை அணிந்து நடப்பது கால்களை காயங்கள் ஏற்படாமல் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். உங்களுடைய நடையின் வேகம், உடலமைப்பு, நடக்கும் தூரம் ஆகியவற்றைப் பொறுத்து கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும்.
46
Belly fat loss exercises in tamil
விறுவிறுவென நடப்பது கெட்ட கொழுப்புகளை எரிப்பதில் உதவும் முக்கிய பயிற்சியாகும். இதயத்தை ஆரோக்கியமாக வைக்க குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடக்கலாம். நடைப்பயிற்சி மெதுவான பலன்களை தந்தாலும் இது ஓடுவதைவிட சிறப்பான பயிற்சி என்றே சொல்லலாம். ஏனென்றால் தொப்பையை குறைக்க வாக்கிங் சிறந்த தேர்வாகும். எடையை குறைக்க நினைப்பவர்கள் தினந்தோறும் நடக்கலாம். இது கால்களின் தசைகளை வலுவாக்குவதோடு, முதுகெலும்பையும் உறுதியாக்க உதவும்.
தீவிரமான உடற்பயிற்சிகளில் 'ஓடுதல்' குறிப்பிடத்தக்க பயிற்சியாகும். ஓடுவதால் உடலில் உள்ள கலோரிகள் சீக்கிரமாக எரிக்கப்படுகின்றன. ஓடும்போது இதயம் வேகமாக துடிக்கிறது. இந்த பயிற்சியினால் இதய செயல்பாடு மேம்படுவதாக கூறப்படுகிறது. வாக்கிங் செல்வதை விட ஓடுவதற்கு அதிக ஆற்றலும் உடல் வலிமையும் அவசியமாக இருக்கிறது. மூட்டுகளில் காயம், அறுவை சிகிச்சை செய்தவர்கள், வேறு ஏதேனும் தீவிரமான மருத்துவ பிரச்சனைகள் இருப்பவர்கள் ஓடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஓடுவதால் தசைகள் வலுவாகின்றன. ரன்னிங் பயிற்சி உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதால் எடையை குறைக்க உதவுகிறது. நடைபயிற்சியை விட ஓடும்போது உடலிலுள்ள அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகின்றன. ரன்னிங் செய்வதால் மனச்சோர்வை குறைத்து உங்களை உற்சாகமாக மாற்றுகிறது. ஓடுவதால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது. வகை 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறது.
66
Weight loss tips in tamil
எது சிறந்தது?
ரன்னிங், வாக்கிங் இரண்டுமே உடல் எடையை குறைப்பதில் உதவக் கூடியவை. தனியாக தொப்பையை குறைப்பது சாத்தியமல்ல. உடலின் ஒட்டு மொத்த உடல் எடை குறைப்புக்கும் தொப்பை குறைவதற்கும் தொடர்புண்டு. நீங்கள் சரியான உணவு பழக்கம், நல்ல தூக்கம், ரன்னிங் அல்லது வாக்கிங் என ஏதேனும் உடற்பயிற்சியை பழக்கமாகினால் நிச்சயம் தொப்பையை விரைவில் குறைக்கலாம்.