
நெய் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இது பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஆயுர்வேதத்தில் பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது. நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் பிற சத்துக்கள் நம்முடைய உடலில் ஆரோக்கியமாக வைக்கவும், தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கவும் மிகவும் நன்மை பயக்கும்.
நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அதை குறைந்த அளவில் எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில் தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: நெய் நல்லது தான்; ஆனா 'இப்படி' சாப்பிட்டா பிரச்சினை வருவது கன்ஃபார்ம்!
வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1. செரிமான அமைப்பு மேம்படும்:
மலச்சிக்க பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டு வந்தால் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் நெய் மலச்சிக்கல், வீக்கம் மற்றும் வயிற்று வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும். அதுபோல வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
2. மூட்டு வலி குறையும்:
நெய்யில் போதுமான அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமின்றி நீங்கள் கால்சியம் நிறைந்துள்ளதால் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
3. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. மேலும் நெய்யில் இருக்கும் ஆன்டி- ஆக்ஸிடன்ட் பண்புகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே தினமும் ஒரு ஸ்பூன் நெய்யை வெறும் வயிற்றிலோ அல்லது சூடான நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். இதனால் பல வகையான தொற்று நோய்கள் வருவது தடுக்கப்படும்.
4. மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
நெய்யில் இருக்கும் பண்புகள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. அதாவது நெய்யில் இருக்கும் வைட்டமின் ஈ மூளையை நோயிலிருந்து பாதுகாக்கவும், மூளையை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது. தினமும் வெறும் வயிற்றில் நீ சாப்பிட்டு வந்தால் உங்களது மூளை எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
இதையும் படிங்க: தினமும் '1' ஸ்பூன் நெய்.. வெந்நீரில் கலந்து குடித்தால் உடலில் 'இப்படி' ஒரு மாற்றமா?
5. சருமம் பளபளக்கும்:
நெய்யில் கால்சியம், ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் இ, வைட்டமின் டி மற்றும் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. எனவே தினமும் காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு வந்தால் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் பருக்கள் வராது. குறிப்பாக சருமம் எப்போதும் பளபளப்பாகவே இருக்கும்.
6. கண் பார்வை மேம்படும்:
நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் அவை கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டு வந்தால் உங்களது கண் பார்வை மேம்படும்.