வீட்டிலிருக்கும் தீயசக்தியை கண்டுபிடித்து நிரந்தரமா விரட்டணுமா?எலுமிச்சை பழத்துடன் உப்பு..விடிஞ்சதும் பண்ணுங்க

First Published | Feb 22, 2023, 1:58 PM IST

நிரந்தரமா வீட்டிலிருந்து எதிர்மறை சக்தியை கண்டுபிடித்து விரட்ட, வெறும் 10 ரூபாய் எலுமிச்சை போதும்.. அதன் வழிகள்..

நிம்மதியான இடம் எது எனக் கேட்டால் பெருபான்மையாவர்கள் சொல்வது வீடாகத் தான் இருக்கும். நமக்கென இருக்கும் வீட்டில் ஒண்டி கிடப்பது சுகம் தான். அப்படியான வீட்டுக்குள் குடியிருக்கும் எதிர்மறை சக்திகளை வெறும் 5 ரூபாய்க்கு கூட எலுமிச்சைப் பழம் வாங்கி தெரிந்து கொள்ள முடியும். அப்படி தெரிந்த பிறகு வீட்டிலிருந்து அந்த எதிர்மறை சக்திகளை வெளியேற்றவும், மன நிம்மதி அடையவும் இங்கு வழிகாணலாம். 

வீட்டுக்குள் நேர்மறை சக்தியும், தெய்வ கடாட்சமும் இருந்தால் தான் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். மாறாக எதிர்மறை ஆற்றல் வீட்டை ஆக்கிரமித்து இருந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி நோய் ஏற்படும். கருத்து வேறுபாட்டால் நிம்மதியில்லாமல் இருப்பீர்கள். இந்த மாதிரி பல பிரச்சனைகளை தரும் எதிர்மறை ஆற்றல்களை வெறும் மூன்று பச்சை எலுமிச்சை பழங்களால் விரட்ட முடியும். 

Tap to resize

முதலாவதாக நீங்கள் வீட்டை விட்டு வெளியே போகும்போது கையோடு உங்கள் பையில் ஒரு பச்சை எலுமிச்சையை வைத்து கொண்டு செல்லுங்கள். இதன் பின்னர் மீண்டும் வீடு திரும்பியதும், பையில் கொண்டு சென்ற அந்த எலுமிச்சையைப் பாருங்கள். அந்த பழம் நன்கு காய்ந்திருந்தால் , உங்களை நோக்கி அதிக எதிர்மறை சக்திகள் வந்துள்ளது என்பதை அறியலாம். உடனடியாக அதை தூக்கி வீசுங்கள்.  

lemon

அடுத்ததாக 2 எலுமிச்சைப் பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை இரண்டாக வெட்டி உங்கள் வீட்டின் வெவ்வேறு இடங்களில் வையுங்கள். இந்த எலுமிச்சை பழங்கள் மஞ்சளாகவோ அல்லது கருமையாக நிறம் மாறினால் அதனை உடனே தூக்கி எறியுங்கள். அங்கு வேறொரு எலுமிச்சையை முன்பு போல வெட்டி வையுங்கள்.

ஒரு பீங்கான் கூடையில் சுமார் 9 எலுமிச்சையை வைத்து பிரிட்ஜில் வையுங்கள். ஒரு எலுமிச்சை நடுவிலும் பிற எலுமிச்சைகள் அதை சுற்றிலும் இருக்கும்படி வைக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வம் செழிக்கும். 

இதையும் படிங்க: மாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு.. எப்போது? எப்படி விரதம் இருந்தால் அம்மன் அருளை முழுமையாக பெறலாம்..

சுத்தமான மழை நீரில் எலுமிச்சைப் பழ தோலை போட்டு நன்கு கொதிக்கவையுங்கள். இதனை வீடு முழுக்க தெளித்தால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் முழுவதும் நீங்கிவிடும். வீட்டில் உள்ள மேஜை மீது ஏதேனும் கண்ணாடி கிண்ணம் (அ) டம்ளர் (அ) குடுவையில் 3 எலுமிச்சைகளை வைப்பதால் வீட்டின் உறவுகள் மேம்படும். இதனை வேலை செய்யும் இடங்களில் இருக்கும் மேஜையில் வைத்து பின்பற்றலாம். எலுமிச்சை காய்ந்ததும் மாற்றிவிட வேண்டும். இதனால் நேர்மறை சக்தி, செல்வம் ஆகியவற்றை ஈர்க்கலாம். 

இதையும் படிங்க: நீங்கள் ஒருமுறை போனால் போதும், எல்லா பிரச்சனையும் தீரும்.. சக்தி வாய்ந்த கும்பகோணம் கோயில்கள் பற்றி தெரியுமா?

வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியை அறியவும், வெளியேற்றவும் இந்த முறையை பின்பற்றலாம். ஒரு எலுமிச்சைப் பழத்தை நான்காக அறுத்து, உப்பு பரப்பிய ஒரு தட்டின் நடுவே அதை வைக்க வேண்டும். இந்த தட்டை நீங்கள் படுக்கும் கட்டிலுக்கு அடியில் வைத்துவிடுங்கள். மறுநாள் இந்த இரண்டையும் கையால் தொடாமல் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தூக்கி எறியுங்கள். இப்படி செய்வதால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் முற்றிலும் விலகி வீட்டில் சுபிட்சம் உண்டாகும். 

இதையும் படிங்க: சாமி ஆடுறவங்க சொல்லும் அருள் வாக்கு நிஜமா பலிக்குமா? அது உண்மையா? பின்னணி என்ன?

Latest Videos

click me!