தற்போது சோபா அனைத்து வீடுகளிலும் பயன்படுத்துகின்றன. வேலை முடித்து அலுப்பாக வீட்டிற்கு வந்தவுடன் சோபாவில் சிறிது நேரம் படுப்பது அவ்வளவு சுகமாக இருக்கும். இது தவிர படம் பார்ப்பது, சாப்பிடுவது, விருந்தாளிகள் வந்தால் அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுவது, குழந்தைகளுடன் விளையாடுவது என அனைத்து விஷயங்களையும் சோபாவில் தான் நாம் செய்வோம். இன்னும் சொல்லப் போனால் சோபா தான் பலருக்கும் பிடித்த இடமாகும்.