Silver Cleaning: வெள்ளி மோதிரம் கறுத்துப்போச்சா? நிமிஷத்தில் புதுசு போல ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்!

Published : Aug 01, 2026, 10:07 AM IST

Silver Cleaning: நீங்கள் அணியும் வெள்ளி மோதிரம் கறுத்துப்போச்சா? நகைக்கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே புத்தம் புதுசு பொல் மாற்றும் எளிய வழிகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
வெள்ளி மோதிரத்தை புதுசு போல மாற்ற சூப்பர் டிப்ஸ்

இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இதனால் அனைவராலும் தங்கம் வாங்க முடியாது. தங்கத்துக்கு மாற்றாக நமக்கு வெள்ளி மோதிரம் கை கொடுக்கிறது. ஆண்களும் பெண்களும் விரும்பி அணியும் ஆபரணங்களில் வெள்ளி மோதிரத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு. அழகு, ஆன்மீகம், ஆரோக்கியம் என பல காரணங்களுக்காக அணியப்படும் இந்த மோதிரம், தொடர்ந்து பயன்படுத்துவதால் வியர்வை, சோப்பு, காற்றில் உள்ள மாசுக்கள் மற்றும் ரசாயனங்கள் பட்டு நாளடைவில் தன் பளபளப்பை இழந்து கறுத்துப் போவது வழக்கம்.

இனி கறுத்த மோதிரத்தைக் கண்டு கவலைப்படத் தேவையில்லை. நகைக்கடைகளுக்குச் சென்று பணம் செலவழிக்காமல், வீட்டிலிருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே உங்கள் வெள்ளி மோதிரத்தை நிமிடங்களில் புதுசு போல மின்ன வைக்க சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.

இதையும் படிங்க: Silver Cleaning: வெள்ளி கொலுசு கறுத்துப்போச்சா? புதுசு போல ஜொலிக்க வைக்க சூப்பர் டிப்ஸ்!

24
1.பற்பசை (Toothpaste) மேஜிக்

வீட்டில் தினமும் பயன்படுத்தும் சாதாரண வெள்ளை நிற டூத்பேஸ்ட் சிறந்த கிளீனராகச் செயல்படும். சிறிதளவு பேஸ்ட்டை மோதிரத்தில் தடவி, பழைய மென்மையான டூத் பிரஷ்ஷால் லேசாகத் தேய்க்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி, உலர் துணியால் துடைத்தால் மோதிரம் உடனடி பளபளப்பைப் பெறும்.

2.அலுமினியம் ஃபாயில் + பேக்கிங் சோடா ட்ரிக்

ஒரு சிறிய கிண்ணத்தில் அலுமினியம் ஃபாயில் தாளை விரித்து, அதில் சூடான நீர் ஊற்றவும். அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு கல் உப்பு சேர்க்கவும். இக்கலவையில் கறுத்த மோதிரத்தை 5 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்தால், வேதிவினையின் காரணமாக கறுப்புத் தன்மை முற்றிலும் நீங்கி மோதிரம் புதிது போல மின்னும்.

இதையும் படிங்க: Gas Burner Cleaning: கேஸ் பர்னர் கறுப்பா இருக்கா? தீ சரியா எரியலையா? 5 சிம்பிள் டிப்ஸ் இதோ!

34
3.எலுமிச்சை சாறு மற்றும் உப்பு

எலுமிச்சையில் உள்ள இயற்கை அமிலம் வெள்ளியின் அழுக்கை எளிதில் போக்கும். ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் அரை ஸ்பூன் உப்பு கலந்து, அதில் மோதிரத்தை நனைத்து மெதுவாகத் தேய்த்துக் கழுவினால் அதன் மங்கல் தன்மை மறைந்து ஜொலிக்கும்.

4. பாத்திரம் கழுவும் லிக்விட் சோப்

லேசான கறுப்பு மற்றும் எண்ணெய் பிசுக்கு அழுக்குகள் இருந்தால், மிதமான சுடுநீரில் சில துளிகள் பாத்திரம் கழுவும் லிக்விட் சோப் கலந்து மோதிரத்தை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு பிரஷ்ஷால் சுத்தம் செய்து துடைத்தால் மோதிரம் பளிச்சிடும்.

இதையும் படிங்க: Kitchen Hacks: சமையலறைக்கு பேப்பர் டவலா? துணியா? ஆரோக்கியத்துக்கு எது பெஸ்ட்?

44
வெள்ளி மோதிரத்தைப் பராமரிக்க கூடுதல் டிப்ஸ்

குளிக்கும்போதும், துணி துவைக்கும்போதும் சோப்பு மற்றும் கெமிக்கல்கள் வெள்ளி மீது நேரடியாகப் படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

மோதிரத்தைப் பயன்படுத்தாத நேரங்களில், காற்ேறாட்டமில்லாத பிளாஸ்டிக் கவர் அல்லது காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்தால் கறுப்பாவதைத் தடுக்கலாம்.

சந்தையில் கிடைக்கும் வெள்ளி துடைக்கும் பிரத்யேக காட்டன் துணிகளை (Silver Polishing Cloth) பயன்படுத்தியும் எளிதில் சுத்தம் செய்யலாம்.

முக்கியக் குறிப்பு: வெள்ளி ஆபரணங்கள் கறுத்துப் போவது அவை போலி என்பதற்கான அடையாளம் அல்ல. வெள்ளி காற்றில் உள்ள சல்பருடன் வினையாற்றுவதால் ஏற்படும் இயற்கை மாற்றமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories