முதலில், உங்கள் சோபாவை சுத்தம் செய்யத் தொடங்கும் முன், அதன் துணிக்கு எந்த வகை கிளீனிங் முறை சரியானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்காக சோபாவின் குஷன்களுக்கு அடியில் இருக்கும் 'கிளீனிங் கோட்' (Cleaning Code) லேபிளைப் பாருங்கள். அதில் 'W' எனக் குறிப்பிட்டிருந்தால் தண்ணீர் சார்ந்த கிளீனர்களையும், 'S' எனக் குறிப்பிட்டிருந்தால் தண்ணீர் இல்லாத சால்வென்ட் (Solvent) வகை கிளீனர்களையும் பயன்படுத்த வேண்டும். 'X' என்று இருந்தால், வாக்யூம் கிளீனர் அல்லது பிரஷ் கொண்டு மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும்.
நீங்கள் எந்தக் கிளீனிங் கரைசலைப் பயன்படுத்தினாலும், அதை சோபாவின் மறைவான ஒரு சிறிய இடத்தில் முதலில் சோதனை செய்வது மிக அவசியம். சுமார் 10 நிமிடங்கள் கழித்து, துணியின் நிறம் மாறவில்லை என்பதை உறுதி செய்த பிறகே, முழு சோபாவையும் சுத்தம் செய்யத் தொடங்குங்கள். மேலும், சுத்தம் செய்வதற்கு முன்பு வாக்யூம் கிளீனர் கொண்டு சோபாவின் மூலை முடுக்குகளில் உள்ள தூசிகளை முழுமையாக அகற்றிவிடுங்கள். இது, ஈரத்துணியால் துடைக்கும்போது தூசி பரவி கறையாக மாறுவதைத் தடுக்கும்.
இதையும் படிங்க:தியேட்டர், மால் டாய்லெட் கதவுக்கு கீழே ஏன் பெரிய கேப் இருக்கு? 99% பேருக்கு தெரியாத உண்மை!